Sunday, October 12, 2014

பிரயாகையின் வரவு




இனிய ஜெயம்.

நண்பர் கே பி  வினோத். தோலை பேசினார். வெகு நாட்களாக அவரது இல்லத்துக்கு என்னை அழைத்துக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் அண்ணனுடன் கண் மருத்துவர் சந்திக்க சென்றுவிட்டதால்  இம்முறையும் சந்திப்பு தள்ளிப் போனது.

பேசுகையில் நீலம் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். இங்கு ஒரு ஆச்சர்யத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

வினோத் ஜெயம் அடுத்த நாவல எப்போ ஆரம்பிப்பார். அதன் சாரம் என்னவா இருக்கும் என் வினவினார்.

திரௌபதியின் பிறப்பும், பாண்டவர்களுடன் அவளது திருமணமும் தான் அடிப்படையாக இருக்கும் என யூகிக்கிறேன் என்றேன்.

நாவல் அக்டோபர் இருபது அன்று துவங்கலாம். என நினைக்கிறேன். என்றேன்.

அதற்க்கான காரணங்கள் இன்னவாக இருக்கும் என்றும் சொன்னேன். மற்றொரு டெலிபதி இன்றைய  பிரயாகை அறிவிப்பு.

ஐந்து நதிகளின் சங்கமம். சங்கமத்தின் நிலம் திரௌபதி. நெருப்பில் ஜனித்தவள். மகாநிதிகளை தன்னுள் கரைத்துக்கொண்ட ஆழி. ஆழி மேல் நின்றெரியும் வடவைத் தீ.

இனிய ஜெயம், சொல்சொல்லாக நவீன வியாசனை தொடரக்காத்திருக்கிறேன். சுயம்வரத்தில் அருகில் நின்று கர்ணனின் தோள்அணைப்பேன்.

பக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தி உங்கள் க்ரியா அஸ்வினி  பல கால்கள் கொண்டு பாய்ந்து எழட்டும் .     ஆவலுடன் காத்திருக்கிறேன்

கடலூர் சீனு


அன்புள்ள ஜெ சார்

பிரயாகையின் அறிவிப்பே ஆச்சரியமூட்டுகிறது. எவ்வளவு எளிதாக நாவலுக்குரிய ஃபார்மேட்டை பிடித்துவிடுகிறீர்கள் என்பதை எண்ணி வியக்கிறேன். கங்கையின் ஐந்து சந்திப்பு முனைகள். அப்படியென்றால் திரௌபதிதான் கதையின் நாயகி. சரியா?

எதிர்பார்க்கிறேன்