Thursday, October 23, 2014

வண்ணக்கடல்- நாகங்கள் -ராமராஜன் மாணிக்கவேல்
வண்ணக்கடல்-7


இன்று எல்லாமும் நாகங்கள்.
துரியோதனனின் புடைத்த நரம்புகள் நாகங்கள்கைகள் நாகங்கள்கால்கள் நாகங்கள்.மரங்களும்கிளைகளும் நாகங்கள்.யானையின் துதிக்கைகள் நாகங்கள் என்று காணும் காட்சி எல்லாம் நாகங்களாக துரியோதனன் காண்கின்றான்.


கயிற்றில் பாம்பைக்காணுதல் ஒரு காட்சிப்பிழை?அல்லது மாயையில் மயங்குதல்.உண்மை அறியும் பக்குவம் இன்மை.அகம் இருண்ட நிலை.


பீமன் வருகின்றான் என்பதில் இருந்து துரியோதனின் காண்பது எல்லாம் நாகங்கள்தான்.முதலில் தனது கனவில் கண்ட கார்க்கோடகன்.இன்று காணும் காட்சி எல்லாம் நாகங்கள்.


துரியோதனின் உடல் வல்லமையைக்காட்ட அவன் பாறைகளை உடைப்பதைக்காட்டிய ஆசிரியர்.அவன் அகத்தைக்காட்ட நாகங்களை காட்டுகின்றார்.ஈடு இணையில்லாத உருவகங்களும் குறியீடும் கொண்டு படைக்கப்படும் துரியோதன் பாத்திரம் அசைக்கமுடியாத இடத்தில் நிற்கின்றது.


சியாமன் என்னும் பெருங்களிற்றின் தும்பிக்கையில் குடியிருக்கும் சக்தை என்னும் நாகத்தை அடக்கும் துரியோதன் பாகர்கள் முன் தனது வல்லமையைக் காண்டுகின்றான்.சியாமன் அடக்கப்பட்டு பாகர்களால் பிணைக்கப்பட்டு கொட்டிலுக்கு கொண்டுவரும் காட்சி எல்லாம் அவன் வல்லமையின் பின்புலத்தில் உள்ளது.

மதங்கொண்ட யானையை அடக்கிய வல்லமையில் மிதந்து கொண்டிருக்கும் துரியோதன் பயிற்சிக்களத்தில் தனது தந்தையும் பீமனும்  பின்னிப்பிணைந்து பொருதும் மல்யுத்தத்தில் மீண்டும் நான்கு நாகங்களையே காண்கின்றான்திருதராஸ்டிரன் கையும்பீமனின் கையும்.
ஏதோ ஒரு மயக்கத்திலேயே மாயையிலேயே இருக்கின்றான் துரியோதனன்.இந்த மயக்கம்தான் அவன் வாழ்க்கை முழுவதும் நாகங்களாக வரப்போகின்றன என்பதைக்காட்டுகின்றது இந்த காட்சிகள்.
நாகங்கள் இருளில் உயிர்பெறக்கூடியவைஎதிலும் நாகங்களைக்காணும் துரியோதனன் அகஇருள் அளவிட முடியாதது.
நன்றி

வண்ணக்கடல்-8

எம் இறைவன் முருகன் திருவடி வாழ்க.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை நோன்தாள்.
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன்-திருமுருகாற்றுப்படை

அமுதே தமிழாய்தமிழே அமுதாய் முருகனை சொல்லும்போது மாறுமோ?
பொற்கவசம்இளஞ்சூரியன்போலசுடர
பச்சைநீலப்பேரொளிமயில்தோகையெனவிரியகீழைவானில்சுப்ரமணியன்எழுந்தபோதுஅடியிலிகளின்அரசனாகியவாசுகிகருமேகச்சுருள்போன்றபேருருவமாகஅவன்முன்விரிந்தான்

என்றும் குமரனாய் இருக்கும் முருகனின் திருப்பெயரில் ஒன்றான பாகுலேயனின் புகழை பாகுலேயன் குமரன் ஜெயமோகன் இங்கு புகழும் தமிழில் மகிழ்கின்றேன்.அவருக்கு என் வணக்கம்.

படிப்படியாய் நடந்து மேல் செல்லலாம்.கற்பனையையும்ஞானத்தையும் படிப்படியாக உயர்த்தி வைத்துக்காட்டலாம் என்பதற்கு திரு.ஜெ இன்று எழுதிய வண்ணக்கடல் பகுதி ஆதாரம்.

இதுமாதரியான ஒரு நூலைப்படிக்கின்றேன் என்பதே பெரும் களிப்பை நெஞ்சில் தேக்கி நெஞ்சு நிமிர்த்த வைக்கின்றது.

பாம்பரசனாகிய வாசுகியை அடியிலிகளின் அரசன் என்ற சொலின் மூலம் சித்திரமாக்குகின்றார்.ஓவியர் ஷண்முகவேலின் கார்கோடகனின் இருவேறு தோற்றங்களை கண்ட கண்களின் அகத்தில் “அடியிலிகளின் அரசன்” என்ற சொல்லே ஒரு புது ஓவியமாகி நிற்கின்றது.

குழந்தைகளை விட்டு நீங்கா பாண்டுவின் நினைவை மீட்டிவிட்டுப்போகின்றது காலில் குழந்தையைப்போட்டு சூரிய ஒளியில் குளிர்காயும் அந்த காட்சி.

மனிதர்கள் உடலென்றும் கால் என்றும் கையென்றும் நினைக்கும் ஒன்று  உண்மையில் அவைகள் அவைகள்தானாகண்ணால் காண்பதும் பொய் என்ற சொல்லை சிற்பாக செதுக்குகின்றார் ஆசிரியர்.

பீமனின் கையில் ஜயனும்மகாஜயனும்துரியோதன் கையில் கேதுவும் ராகுவும்.கற்பனையும் தொடமுடியாத கற்பனை.

எழுத்து ஒரு வேள்விஎழுத்து ஒரு தவம் என்று சொல்லும் மனிதர்களைப் பார்க்கும்போது என்ன சொல்கின்றார்கள் என்பது புரியாது.இதுதான் வேள்வியா?இதுதான் தவமா?வேள்வியும் தவமும் இல்லாமல் இப்படி எல்லாம் எழுத முடியுமா?

யானை பீமனைப்பார்க்கும்போதெல்லாம் ஏன் வேறு ஒன்றைப்பார்ப்பதுபோல் பார்க்கின்றது?தாக்கவோ அல்லது அஞ்சவோ செய்கின்றது என்ற முடிச்சு அவிழ்ந்துக்கொண்டது.அதை அப்படியே திடீர் என்று அவிழ்த்துவிடாமல் யானையின் துதிக்கையில் இருக்கும் சக்தையை நேற்று அறிமுகப்படுத்தி இன்று அவிழ்ப்பது அழகு.

கருநாகங்கள் கருநாகத்துடன் சேர்ந்ததுபோல சக்தை ராகு கேது இணைந்து இருப்பது இருள் இருளுக்குள் சுருண்டுக்கொண்டதுபோல் உள்ளது.

காந்தாரிகளின் நூறு பிள்ளைகள் நூறு நாகங்கள்.அவர்கள் தூக்கத்தில் நெளிவது நாகத்தின் நெளிவு.நாளை நாகத்தின் காவலில் இருக்கும் கருநாகமாகிய ராஜநாகம் கர்ணன் இனம் இனத்தோடு சேர்ந்துவிட்டது என்பது மிகை இல்லா உண்மை.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு-என்ற திருக்குளின் பொருளை ஒரு காவியமாக்கும் வித்தையை இன்று ஆசிரியர் பதிவாக்கி உள்ளார்.

பீமன் துரியோதன் என்ற இருபெரும் வல்லமைகள்  புறக்கண்களுக்கு தெரிகின்றதுஅதன் வல்லமையை அகக்கண்கள் அறியும் விதத்தில் யுத்தம் படைக்கப்பட்டு உள்ளதை கண்டு சிலிர்த்தேன்பீமன் துரியோதன் என்ற இரு உடல்கள் அழிந்து  நான்கு பெரும் நாகங்களின் யுத்தம் அகத்திற்கு நடந்துக்கொண்டே இருந்தது.

பீமனும் துரியோதனனும் ஆடிப்பாவைபோல் ஒன்றாக இருந்தாலும்அவர்களின் இதயங்கள் இணைந்தாலும் அவர்களை இணையவிடாத நாகங்கள்தான்  அவர்களின் விதியாகி படமெடுத்து நிற்கின்றன.

நன்றி