Tuesday, October 28, 2014

துருவனும் தர்மனும்




ன்புள்ள ஜெயமோகன்

அற்புத்ம். துருவ நட்சத்திரம், கங்கையன்னை பால்வழியில் இருந்து மண்ணுக்குவந்த பரிணாமம். நிலையான துருவன் அலையடிக்கும் கங்கை. நீங்கள் விவரிக்கவில்லை ஒரு ஐமாக்ஸ் அனுபவத்தை அளிக்கிறீர்கள். நானே தௌம்ரருடன் நடந்து இமையத்தின் அற்புதமான நிலப்பரப்பில்  கோமுகத்தின் சுனையில் துருவ விண்மீனைப்பார்த்த அனுபவம்


 நியூசிலாந்தின் ரொடௌரா [ Rotarua] பகுதியில் இருந்து காரை ஓட்டிக்கொண்டு வந்த ஒருநாளை நினைவுறுகிறேன். அமைதியான அந்த இரவில் மொத்தவானமும் மிக அருகே தெரிந்தது. கோடிக்கணக்கான விண்மீன்களும் நடுவே தெற்கின் கிரக்ஸ் விண்மீன் கூட்டமும். திடீரென்று நான் மிகவும் மன எழுச்சி அடைந்தேன். அத்தகைய அற்புதங்களை எனக்குக் காட்டுவதற்காக கண்ணீருடன் நன்றி சொன்னேன். அதேபோல இப்போது வெண்முரசை வாசிக்க நேர்வதற்காக நன்றி சொல்கிறேன்

அதன்பின் கதை ஹஸ்தினபுரிக்கும் அங்கே நிகழும் குருதட்சிணை நிகழ்ச்சிக்கும் செல்கிறது. வரப்போகும் நிகழ்ச்சிகளுக்கான முன்னோட்டமாக அமைந்திருக்கிறது. தர்மனுக்கும் அர்ஜுனனுக்கும் படகில் நிகழும் உரையாடல் மிகச்சிறப்பாக உள்ளது. தர்மன் தங்கள் முதல் போரை அறிவுஜீவி உரையாக மாற்றி அதிலிருந்து விலக முயல்வதை  அர்ஜுனன் உணர்கிறான். அரவணைக்கும் தன்மை கொண்ட, அதேசமயம் ஆசைகளும் கொண்ட மூத்தவன் ஒருவன் உணவுகள் அவை/

தர்மன் விடிவெள்ளியைப்பார்ப்பதும் அதை அறத்தின் வடிவமாக இணைத்துக்கொள்வதும் ஒவ்வொரு வரியும் வைரமாக மின்னும் புனைவு பரப்பு

ஷோபனா அய்யங்கார்