Friday, October 17, 2014

பாஞ்சாலம்


[ராஜா ரவிவர்மாவின் பாஞ்சாலி. உத்தரதேசத்தில் சேடியாக ]

ஜெ,

பிரயாகை வெளியாகவிருக்கிறது. அதில் பாஞ்சாலியின் கதை வருகிறது என்கிறீர்கள். பாஞ்சாலம் என்பது இன்றைய பஞ்சாபா? ஆனால் கங்கையை பல இடங்களில் சொல்கிறீர்களே?

சிவராஜ்

அன்புள்ள சிவராஜ்

பாஞ்சாலம் என்பது இமையமலை அடிவாரத்தில் இருந்து  இன்றைய அலஹாபாத் வரையிலான இடமாக இருந்திருக்கலாம்என்று பொதுவாக ஊகிக்கப்படுகிறது. இமையத்தை ஒட்டியபகுதி உத்தர பாஞ்சாலம். கங்கையை ஒட்டியது தட்சிண பாஞ்சாலம். இன்றைய உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நிலப்பகுதி இது.

தட்சிணபாஞ்சாலத்துக்கு காம்பில்யம் தலைநகராக இருந்துள்ளது.உத்தர பாஞ்சாலத்துக்கு அகிசத்ரம் அல்லது சத்ராவதி தலைநகர். காம்பில்யம் கங்கை கரையில் இருந்த சிறிய துறைநகரம்

பாஞ்சாலம் என்ற பெயர் ஐந்து நதிகளால் வரவில்லை. ஐந்து குலங்கள் ஆண்ட ஐந்து நிலங்களின் தொகுதி அது. கேசிகள்,சிருஞ்சயர்கள், துர்வசுக்கள், சோமகர்கள், கிருவிகள் என்னும் ஐந்து குலங்கள் மகாபாரதகாலத்திலும் வலுவாக இருந்தன

ஜெ

கேசவமணி மழைப்பாடல் பற்றிய தொடர்