Tuesday, October 14, 2014

மறுபிறப்பு



ஜெ

மறுபிறப்பு எடுக்காதவர்கள் மாமனிதர்கள் ஆவது கிடையாது என்பார்கள். positively and negatively.காந்தி தென்னாப்ரிக்காவின் ரயிலில் இருந்து பிடித்து தள்ளப்பட்டபோது மறுபிறப்பு அடைந்தார். அதேபோல வெண்முரசின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மறுபிறப்பு அடைவதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

இந்த soul rebirth ஐ முன்வைப்பதற்காகத்தான் நீங்கள் புராணங்கள் சொல்லும் வழக்கமான மறுபிறப்பை வைக்கவில்லை என்ற எண்ணம் வந்தது. நாவலில் முக்கியமான மறுபிறப்பு என்பது அம்பாதேவி செத்து சிகண்டியாக மறுபிறப்பு எடுப்பதுதான். அது இன்னொரு உடலில் மறுபிறப்பு எடுப்பது

சிகண்டி மறுபிறப்பு எடுப்பதும் முக்கியமான இடம். ஸ்தூணகர்ணனின் ஆலயம். அங்கேதான் துர்யோதனனும் வந்து மறுபிறப்பு எடுக்கிறான். இரண்டுமே தன்னையே கொன்று மீண்டு வருவதுபோல

கங்கை நீருக்குள் விழுந்து பாதாள நாகலோகம் போய் தான் பீமன் மறுபிறப்பு எடுக்கிறான். அதேபோல துரோணர் துருபதனால் அவமானப்படுத்தப்பட்டு தன்னுடைய தாயான புல்தேவதையைப்பார்க்கப்போகும் இடத்தில் மறுபிறப்பு எடுக்கிறான்

கர்ணன் துரோணரிடமிருந்து ஓடிப்போகிறான். மறுபிறப்பு எடுத்து திரும்பிவந்திருக்கிறான். எங்கே என்பது சொல்லப்படவில்லை

அந்த soul death and rebirth எல்லாமே அற்ப்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. நாவலை இந்த கோணத்திலே தொகுத்துக்கொண்டால் பிரம்மாண்டமாக எழுகிறது

அரவிந்தன் மகாதேவன்


துரியோதனி

துரியோதனும் துச்சாதனனும்



மழைப்பாடல் பற்றி கேசவமணியின் பதிவு