Saturday, October 18, 2014

வண்ணக்கடலின் திருவிழாக்கள்




அன்புள்ள ஜெமோ

வண்ணக்கடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று டைரியில் ஒரு குறிப்பாக இதை எழுதி வைத்தேன். வண்ணக்கடல் விதவிதமான திருவிழாக்களை விரிவாகச் சித்தரிக்கிறது. விதவிதமான நகரங்களையும் சித்தரிக்கிறது. இந்நகரங்களையும் திருவிழாக்களையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவதன் வழியாகத்தான் நாம் வண்ணககடலின் அமைப்பைப் புரிந்துகொள்ள முடியும்

ஒருபக்கம் அஸ்தினபுரி. அதற்கு மறுபக்கமாக அத்தனை இந்திய நகரங்களும் உள்ளன என்று தோன்றுகிறது. தென்மதுரையில் ஆரம்பிக்கும் சித்திரம் அப்படியே அசுரர்களின் மண்மறைந்த பெரும் நகரங்களையெல்லாம் சொல்லி அஸ்தினபுரி என்னும் நகரங்களின் அடுக்குகளுக்குள் போய் மண்ணுக்குள் மறைந்துவிடுகிறது.

அதேபோலத்தான் திருவிழாக்கள். ஒருபக்கம் மிகப்பெரிய வைதிகச்சார்பு விழாக்கள் நடக்கின்றன. இந்திரவிழா அதில் முக்கியமானது. சூரியவிழா இன்னொன்று.

மறுபக்கம் தென்னாட்டில் பூம்புகாரில் பூதங்களுக்கு ஊட்டும் விழா. சிவப்படிவர்கள் கழுவேறும் விழா. அப்படியே சென்று அசுரர்நாட்டின் திருவிழாக்கள். இங்கே அன்னைதெய்வங்கள் வழிபடப்படுகின்றன

இந்த விழாக்களை நுட்பமாகப்பார்க்கிறேன். இருவிழாக்களுமே சமானமாக இருக்கின்றன. அசுரர்நாட்டின் புதுப்புனலாட்டு விழாதான் சூரியவிழாவாகவோ இந்திரவிழாவாகவோ மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது

ஒருவாசகன் நினைவில் இந்த விழாக்களைத் தொகுத்துக்கொள்வானென்றால் அவனுக்கு ஒரு மகாபாரத தரிசனமும் பாரததரிசனமும் கிடைக்கும்

சண்முகம்



அன்புள்ள சண்முகம்

இந்தியா என்பது மிகப்பெரிய ஒரு தொகுப்புச்செயல்பாடு. பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துவருகிறது. அந்தத் தொகுப்பை நிகழ்த்துபவை மூன்று விசைகள். ஒன்று திருவிழா. இன்னொன்று தத்துவம். மூன்று புராணம்

மூன்றையும் ஒன்றுடனொன்று பிரிக்கமுடியாது. வண்ணக்கடல் மூன்றையும் ஒன்றாகவே சித்தரிக்கிறது

திருவிளையாடல்புராணத்தையும் சித்திரைத்திருவிழாவையும் சைவசித்தாந்தத்தையும் ஒன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்- மதுரையை புரிந்துகொள்ளலாம்

ஜெ .


கேசவமணி மழைப்பாடல் பற்றிய தொடர்