அன்புள்ள ஜெ
கர்ணனுக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் நம்முடைய புராணமரபில் வந்தது என்று யோசிக்கிறேன். நான் சிறுமியாக இருக்கும்போதே எனக்குக் கர்ணனைப்பிடிக்கும். அவனைவிட எல்லா வகையிலும் சிறுவர்களுக்குப் பிடிக்கவேண்டிய வீரன் அர்ஜுனன்தான் ஆனால் கர்ணன் மேல்தான் மனசு சென்றது.
மழைப்பாடலில் கர்ணன் பிறக்கும்போதே மனசு அவனை வழிகட ஆரம்பித்துவிட்டது.வண்ணக்கடல் வந்தபிறகு கர்ணனைத்தான் நினைத்து நினைத்து வாசித்தேன்
நேற்று முதல் மீண்டும் கர்ணன் வரும் பகுதிகளை வாசித்தேன். மனம் கனத்துப்போனது. இந்த ஈடுபாடு ஏன் என்று யோசிக்கிறேன்
ப்ரியா
அன்புள்ள பிரியா
கதாபாத்திரங்கள் ஊடும்பாவுமாக நெய்யப்படும்போதே அவை ஆழமும் உயிர்ப்பும் கொள்கின்றன
அர்ஜுனனில் ஊடு மட்டுமே உள்ளது. பாவு இல்லை. கர்ணன் அப்படி அல்ல. மாவீரன் அழகன் என்பது ஊடு. வஞ்சிக்கப்பட்டவன் வன்மம் கொண்டவன் என்பது பாவு
அர்ஜுனன் வீரன் என்னும் ஒற்றை அடையாளம் கொண்டவன். கர்ணன் துயரநாயகன் என்னும் இன்னொரு அடையாளமும் கொண்டவன்
ஜெ
கேசவமணி மழைப்பாடல் பற்றி எழுதும் தொடர்