Tuesday, October 14, 2014

சித்ரகர்ணி



அன்புள்ள ஜெமோ சார்

முதற்கனல் வாசித்துக்கொண்டிருந்தேன். சித்ரகர்ணி என்ற முதியசிங்கத்தைப்போல நான் விரும்பிய இன்னொரு கதாபாத்திரம் இல்லை. என்ன ஒரு மெஜெஸ்டி. ஆனால் முதுமையில் ஒரு பரிதாபமான இறப்பு

ஆனால் நாவலை வாசித்துமுடித்து மழைப்பாடல் பாதிவந்தபோது சித்ரகர்ணி நினைவுக்குவந்துகோண்டே இருந்தது. ஒருகட்டத்தில் புரிந்துகொண்டேன் அது பிஷ்மர்தான் என்று

பீஷ்மரைப்புரிந்துகொள்ள சித்ரகர்ணியை மட்டுமே கவனித்தால்போதும். சொல்லப்போனால் கடைசிவரை போகும் பீஷ்மரின் ஒட்டுமொத்தக்கதையும் சித்ரகர்ணியின் கதையில் உள்ளது. மழைப்பாடலில் வரும் சித்ரகர்ணியின் முடிவையும் சேத்து வாசித்தால் ஒரு கிளாஸிக் நாவலுக்கான கரு என்று தோன்றுகிறது. அதை தனியாகவே எழுதமுடியும்

சித்ரகர்ணியின் இறப்பு ஒரு பெரிய எபிக் டிராஜிடி. அதுவும் அந்த சின்ன கழுதப்புலிக்குட்டியால் அது கொல்லப்படுவது, அதன் இதயத்தை குட்டிப்புலி சாப்பிடுவது. கிராண்ட்

பிஷ்மரை அதன்பிறகு வாசிக்கும்போதெல்லாம் இந்த அற்புதமான அலிகரி கூடவே வந்துகொண்டிருந்தது

சிவராஜ்