அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
உடல் எத்தனை மகத்தானது.
அவனுக்காக அழகுகொள்ளும்வரம்
அதற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
நிலையிழந்தாடும் உள்ளமே இரங்கத்தகுந்தவள் நீ.
இங்கே நான், இதோ நான், இவ்வண்ணமே நான் என
இருத்தலே அறிவிப்பாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் வரம் உனக்கில்லை. உள்ளி உள்ளி ஓராயிரம் தவம்செய்தாலும்
ஓதி நூல் ஒருகோடி அறிந்தாலும்
இவ்வுடலறிந்ததை அகம் அறியுமா என்ன?
உன்னை என் கண்களால் அறிகிறேன்.
என் உதடுகளால், கைகளால், கன்னங்களால் அறிகிறேன்.
உன்னை அறிந்து உருகித் துளிக்கின்றன
என் மார்பில் பூத்த மலர்க்குவைகள்.
எங்கோ விழுந்து திகைத்து விழிமலைத்துக் கிடக்கிறது
என் இளநெஞ்சம் /
தனித் தனியாக கவிதை போல் வாசித்தாலும் எங்கோ அழைத்து செல்கிறது "நீலம்".
மிகுந்த நிறைவை தருகிறது
வி மணிகட்ண்டன்