Tuesday, October 21, 2014

வண்ணக்கடல்- கடல்பயணம்- ராமராஜன் மாணிக்கவேல்
நன்றி
வண்ணக்கடல்-31
July 01, 2014

உப்புக்கரைய தண்ணீர்போதும், ஆனால் தங்கத்தைக்கரைக்க ராஜதிரவாகம்வேண்டும்.ஏன் இந்த வாக்கியம் என்று தெரியவில்லை ஆனால் இப்படி தொடங்கவேண்டும் என்று மனதிற்குள் ஒரு மலர்தல் தொடங்கியது.

வெண்முரசை மீண்டும் படிக்கும்போது கடலுக்குள் பயணம் செய்யும் அனுபவம்.எங்கும் வெறும் பெரும் தண்ணீர்.சில சிறியபெரிய மீன்கள்.கடற்குதிரைகள். ஜெல்லிமீண்கள், நட்சத்திரமீன்கள், வண்ணவண்ண பெரிதும் சிறிதுமான நண்டுகள் மீன்கள் சுராக்கள் திமிங்களும், பாசிகள், தாவரங்கள் என்று விழிகள் விரிந்துக்கொண்டே செல்லச்செல்ல சென்றேன். சில இடங்களில் பூச்செண்டு பூச்செண்டாய் பவழப்பாறைகள்.துள்ளும் அள்ளும் தள்ளும் இழுக்கும் அலைகள் எல்லாம் சேர்ந்ததுதான் கடல்.எல்லாம் சேர்ந்ததுதான் வெண்முரசு.

வியாசர் சுகதேவரைப்பார்க்கவந்தபோது எது ஒழுக்கம்?என்ற வினா எழ கண்ணீரோடு மகனிடம் மண்டியிடுகின்றார். கருணை கொண்ட அனைத்தும் ஒழுக்கம்தான்வியாசனக்கு தகப்பன்சாமி ஆகின்றார் சுகதேவர்.

கருணைக்கொண்ட அனைத்தும் ஒழுக்கம்தான்வெண்முரசுக்குள் பவழப்பாறையாக இருந்த நீதி இப்போது எல்லாம் விரல்மோதிரமாக, எதிரில் வரும்தேவதையின் நெற்றிச்சுட்டியாக ஆகிவிட்டதுபோல் என்னை இழுத்துச்செல்கின்றது. சில நாட்களாக இந்த நீதி உள்ளுக்குள் குளிரை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.இதன் வழியாக பல அனல்கள் தன்நாவின் நீட்டலை சுருட்டிக்கொள்வதை உணர்கின்றேன். இந்த சொல் வழியாக இன்னும் நான் இழுத்துச்செல்லப்பட்டபோது விசித்திரவீரியனின் இரண்டு இளம்மனைவிகள் கைபெண்ணாகி கருசுமக்கும் கொடுமை ஒரு பக்கம்.

யுவனின் உலகலந்தநாயகியில்ரெங்கநாயகி அக்காள் கணவன் அருகிருக்க பசியோடு காத்திருக்கும் வன்கொடுமை மற்றொரு பக்கம்.

ஜெயகாந்தனின் பிணக்குல் கைலாசம் தாத்தாவும், தர்மாம்பாள் பாட்டியும் வாழ்ந்த வாழ்க்கையும் ஒரு கணத்தில் ஒரு நொடியில் அது உதிர்ந்துபோகும் இடமும்.கையறு நிலையும் மூன்றும் வந்து முட்டிக்கொண்டு எது ஒழுக்கம்?எது வாழக்கை?என்று உலுக்கியது.

மூன்றுக்குள்ளும் உயிராக பொதிந்து இருந்த கருணை ஏதோ ஒரு இடத்தில் நீர்வற்றிய பெரும்பாலையாக ஆகி அவதிக்கு உள்ளாக்கியது.

திரு.ஜெவின் எழுத்துக்கள் சுகதேவரின் நாவாகும் தருணத்தில் வந்து விழுந்த சொல்லில் இதை முடிக்கிறேன். “கருணை கொண்ட அனைத்தும் ஒழுக்கம்தான்
ஒழுக்கம் வாழ்க்கையாகவும் ஆகிநிற்கின்றது.

இதை முடிக்கும் தருணத்தில் இன்றை வண்ணக்கடலில் இருந்து எடுத்த முத்துவைப்பார்க்கின்றேன் மணம்புரிந்துகொண்டதனாலேயே கணவர்கள் மனைவியருக்கு ஏதோ ஒரு அநீதியை இழைத்துவிடுகிறார்களா என்ன?”


கருணை, ஒழுக்கத்திற்காக நான் கண்ட திரு.ஜெவின் விசித்திரவீரியன் மனைவிகள், யுவனின் ரெங்கநாயகி அக்கா, ஜெயகாந்தனின் தர்மாம்பாள் பாட்டி அனைவரும் ““மணம்புரிந்துகொண்டதனாலேயே கணவர்கள் மனைவியருக்குஏதோ ஒரு அநீதியை இழைத்துவிடுகிறார்களா என்ன?”  என்ற கேள்வியுடன் என்னை சூழ்ந்துக்கொண்டு விட்டார்கள்.


தண்ணீரில் கரையும் உப்புபோன்ற எளிய வாழ்க்கை, மின்னும் தருணங்களால் தங்கமாகிவிடுகின்றது என்று மகிழும் கணத்தில் அது நெருப்பில்கூட நீறாகாமல் ராஜதிரவாகத்தில் மட்டும் கரையும் வன்மத்தை அடைந்துவிடுகின்றது.


காற்றில் கரையும் வாசம்போன்றது வாழ்க்கை என்று கண்டுக்கொண்ட ஞானிகள்தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறார்கள்.வாழ்வின் அனைத்தையும் சிரிப்பில் கண்டுகொள்ளும் கிருபிப்போன்றவர்களையும் வாழ்க்கை வாய் அடைத்துப்போகவைத்துவிடுகின்றது.


நன்றி்

வண்ணக்கடல்-38
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

1985ல் பதினாறு வயதை தொட்டவர்கள் தாண்டியவர்கள் அனைவரும்நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா?” பாடலை ஒரு முறையாவது முணுமுணுத்து இருப்பார்கள் அல்லது அதற்கு செவியாவது கொடுத்து இருப்பார்கள் ஒரு மௌனராகம் அவர்களுக்குள் இருந்து இருக்கும்.


நான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா?” பாடல் எனக்குப்பிடித்தப்பாடல்தான். அந்தப் பாடல் அதிகமாகப்பிடித்துப்போனதற்கு காரணம் பாட்டி வீட்டிற்கு விடுமுறையில் போயிருந்தபோது  அந்தப்பாடல் கேட்டவிதம்தான்.


காலையில் கண்விழிக்கவில்லைநான் பாடும் மௌனராகம் கேட்கவில்லையா?” காற்றில் மிதந்துவந்து காதில்பாயுது தேன். அன்று முழுவதும் நாவில் ஒட்டிக்கொண்டு நாக்கை சுழற்றிக்கொண்டே இருந்தது அந்தப்பாடல்.


மறுநாள் காலையிலும் அந்தப்பாடல்.அட யாருடா அவன்? விடியும்போதே காதலிய தூங்கச்சொல்றவன் என்ற கேள்வியோடு எழுந்தபோதுதான் மைத்துனன் சொன்னான்நீங்க ஒருமுறைதான் கேட்டிருக்கிங்க, ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்துமுறையாவது இந்த பாடலை கேட்கலாம், வீட்டிலேயே இருந்தீர்கள் என்றால் என்றான்
பக்கத்து தெரு காலேஜ்மாணவன் காதலித்த கதை இது.அந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் அவன் நினைவு வராமல் அந்தப்பாடலைக் கேட்கமுடிவதில்லை.இதனாலேயே அந்தப்பாடல் அதிகமாகப் பிடித்துப்போனது.

சமிபத்தில் அந்தப் பாடலைப் பார்த்தப்போதுதான் ஒன்றைக்கண்டுக்கொண்டேன்.காதலியை இழந்த காதலன் பாதியாகி நின்றுப்பாடும்பாடல், “பூ உதிர்ந்தப்பின்பு காம்பு என்ன வாழ்வதுஎன்ற வரிக்கு அர்த்தம் கொடுக்கும் காட்சி.சிவன்பாதி, சக்திப்பாதி என்ற தொன்மம்.நீ இறந்துவிட்டாய் ஆனால் என்னில் நான் இறந்து நீ மட்டும்தான் என்னுடன் இருக்கிறாய் என்ற நிலை.ராஜராஜன் ஒளிப்பதிவில் நடிகர் மோகன் பாதி வெள்ளைசால்லையுடன் பாதி முகம், பாதி உடல் மட்டும் தெரிய அந்தப்பாடலைப்பாடுவார்.அந்த பாடலும் அந்த காட்சியும் ஒளிப்பதிவும் உள்ளத்தை என்னமோ செய்தது.


நேற்று வண்ணக்கடல்-38யைப் படிக்கும்போது எண்ணம் அந்தப்பாடலிலும் அந்த ஒளிப்பதிவிலும் சென்று நின்றது

குந்திவெள்ளாடையால்தன்தலையையும்பாதிமுகத்தையும்மறைத்துக்கொண்டுசேடிகள்நடுவேநடந்தாள்


உடலில்லா காமன் மண்ணில் மனிதராக உடல்கொண்டு மலரும் இந்திரவிழாப்போன்ற நாளில் பழையக் காதலியைப் பார்ப்பதே கொடுமை, அதிலும் பாதி முகம் மறைத்துக்கொண்டு வரும் காட்சியை கண்கொண்டுப்பார்க்கும் காதலன் கண்கள் எத்தனைப் பாவம் செய்திருக்கவேண்டும்.


குந்தி தன் முகத்தை வேண்டும் என்றே பாதி மறைத்துக்கொண்டாளா?இயற்கையாகவே நடந்ததா?அவள் தான் பாண்டுவின் பாதி என்று சொல்லாமல் சொல்கின்றாள்.ஆசிரியர் ஜெயை நான் என்ன சொல்லிப் பாராட்டுவது.


நன்றி