Sunday, October 19, 2014

வெண்முரசு கட்டுரைகள்

ஜடாயு





[மரபின்மைந்தன் முத்தையா]



கேசவமணி


வே.சுரேஷ்

சுனீல்கிருஷ்ணன்

****



அன்புள்ள ஜெ சார்

சமீபத்தில் வெண்முரசு பற்றி வாசித்த ஐந்து நீண்ட  கட்டுரைகளும் மிகச்சிறப்பாக இருந்தன.

ஜடாயு முதற்கனல் நாவலுக்கு எழுதிய விரிவான அறிமுகம் நாவலுக்குள் செல்வதற்கு மிகவும் உதவிகரமானதாக இருந்தது


மரபின்மைந்தன் எழுதிய வியாசமனம் தொடரை வாசித்துத்தான் முதற்கனலை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. எந்தெந்த விஷயங்களை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்று சொன்னதோடு பண்டைய இலக்கியங்களில் சமானமான இடங்களையும் கோடிகாட்டியிருந்தார்

கேசவமணியின் தொடரும் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. அவர் உணர்ச்சிகரமாக ஈடுபட்டு வாசிக்கவேண்டிய இடங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

வெ.சுரேஷ் மூன்றுநாவல்களையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்துச் சொல்லியிருந்தார். அவர் எழுப்பியிருந்த கேள்விகளும் அவற்றுக்கு நீங்கள் அளித்த பதிலும் சிறப்பான முறையில் நாவலிப்புரிந்துகொள்ள உதவிசெய்தன

சுனீல் கிருஷ்ணன் முதற்கனலுக்கு எழுதியிருந்த விமர்சனமும் மிகச்சிறப்பானது. எனக்கு அந்தப்பார்வை மிகவும் நெருக்கமானதாக இருந்தது.



இந்த கட்டுரைகளின் முக்கியம் என்னவென்றால் அவற்றை வாசிக்கும்போது நாம் மற்ற இடங்களைச் சுட்டிக்காட்ட ஆரம்பிப்பதுதான். அப்படி மொத்த நாவலும் மனசுக்குள் திரும்ப ஓடிவிடுகிறது. அது ஒரு சல்ல அனுபவமாக இருந்தது

அந்தக்காலத்திலே படம் பாத்துவிட்டு வந்து கதை சொல்வோம். கதைசொல்லும்போதுதான் படம் வளரும். படம் பார்க்கும்போது அழாத அக்காள்களெல்லாம் கதை சொல்லும்போது அழுவார்கள்

நாமே நினைக்கும்போது கதை நம்முடையதாக ஆகிவிடுகிறது. அந்த அனுபவத்தை கட்டுரைகள் அளித்தன

நன்றி

ஆசைத்தம்பி