அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.
அரசமர நிழலில் அலைகூந்தல் உலர்த்திக்கிடக்கும் குளக்கரையில் உட்கார நேரம் கிடைத்தவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.அப்படி ஒரு ஆசிர்வதிக்கப்பட்டவன் கங்கைகரையில் கங்கைகரையில் உட்கார நேரம் அருப்பட்டதைப்போல் உணர்கின்றேன் வெண்முரசு படிக்கும் தருணத்தை.
குளத்தின் அலையோடு விளையாடும் உற்சாகத்தில் அதற்குள் கல்லெறியும் சந்தோஷத்தில் எழுதியவைகள்தான் வெண்முரசுக் கடிதங்கள்.
குளத்திற்குள் எரிந்த கல் குளத்திற்குள் அலையெழுப்பி அமிழ்ந்துப்போவதே ஒரு சுகம் அது அந்தநேரத்தோடு இணைந்தது.
என்ன ஒரு ஆச்சர்யம் குளத்திற்குள் விழுந்த கற்களை எல்லாம் நீரணங்கு மேலெடுத்துவந்து தந்தபோல் இருந்தது விவாததளத்தில் கடிதங்களை மீண்டும் படித்தது.
மனிதன்தந்தால் கல் மீண்டும் கல்லாகத்தான் திரும்பிவரும், தேவதை தந்ததால் கல்லெல்லாம் பூவாக முத்தாக மணியாக ஆனதுபோல் இருக்கின்றது.
ஆரைக்கீரைக்கு ஒரு தண்டும் நான்கு இதழ் இலையும்தான் இருக்கும் அதைப்பார்க்கும்போது இதற்கு என்ன பெரும்பேறு இருக்கமுடியும் என்று எண்ணுவேன்.அதுவும் தன்னை ஒருதாவரமாகக்காட்டிக்கொள்கின்றதே என்ற வியப்பதுண்டு.
வெண்முரசு என்னும் பெரும் கங்கையின் இடையில் அந்த ஆரக்கீரை இருந்தால் அதைகூட கங்கை தலைதடவி ஆசி அளித்துவிட்டு செல்கின்றது என்பதைக் கண்டுக்கொண்டேன். மீண்டும் உங்கள் தாயுள்ளத்தை வியக்கின்றேன் வணங்குகின்றேன். “சிரஞ்சீவிகள் ராமராஜன்மாணிக்கவேல்” கடிதத்திற்கு அடியில் என் புகைப்படம். எனது எல்லா கடிதங்களும் பூத்திருக்கும் அழகு.எல்லா கடிதத்தையும் ஒரே மூச்சில் படித்தேன்.தூங்காமல் மீண்டும் கடிதம் எழுத நினைத்தேன்.மூன்றுநாள் ஆறப்போட்டேன்.வண்ணக்கடலில் நீந்தினேன்.
பெரியோர்கள் இந்த உலகத்தை அளவில்லாமல் நேசிக்கிறார்கள், இந்த உலகத்தில் உள்ள எளிய உயிர்கள் இன்பம் அடைவதற்காக என்பதை உங்கள் மூலம் காண்கின்றேன்.
”யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்”
”எல்லோதும் இன்புற்ற இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” என்ற நம்முன்னோர்கள் எல்லாம் வெறும் சொல் சொல்லவில்லை, உலகத்தின் உயிர் எது என்று சொல்லிச் சென்று இருக்கிறார்கள்.
விதிசமைப்பவர்கள் அதை உலகில் நடைமுறைப்படுத்திப்பார்க்கிறார்கள்.நீங்ககள் சொல்லென்னும் அமுது சமைப்பவர்.
”சொல்லில்நிற்கும்பொருள்என்பதுஉடலில்நிற்கும்உயிர்போலஒருதற்காலிகலீலை.இங்கேஇப்போதுஇச்சொல்லில்இப்பொருள்நிற்கிறதுஎன்றவகுத்தறிவைநிருக்தம்என்றனர்முன்னோர்.ஒவ்வொருசொல்லும்பொருள்குறித்ததுவேஎனநிருக்தத்தின்முதல்விதியைஅகத்தியமாமுனிவர்சொன்னார்.எங்குஎப்படிசொல்லில்பொருள்தங்குகிறதென்றறிந்தவன்மொழியைஅறிந்தவனாகிறான்.மொழியைஅறிந்தவன்அறிவையும்அறிவைஅறிந்தவன்அகிலத்தையும்அறிந்தவனாகிறான்”-வண்ணக்கடல்-42.
அகிலத்தை அறியத்தான் எல்லா சொல்லும் அது அமுதமாகவும் இருப்பது எத்தனைப்பெரிய இறைகடாச்சம்.
நன்றி
குலதெய்வம் கோயில் குலதெய்வத்தை மறைத்துக்கொண்டு குதிரை நிற்பது தெரிகின்றது.
சின்னதும் பெரிதுமாக மண்குதிரைகள் வாங்கி குலதெய்வம் கோயிலையே குதிரைவனமாக்கவிடும் மக்களின் ஆவல் எதை நோக்கி செல்கின்றது.
தன் வயிற்றில் உதித்த ஒன்றாவது குதிரைவீரனாகி குலம்காக்கும் தெய்வமாகிவிடவேண்டும் என்ற தவிப்பு தெரிகின்றது.
ஸ்ரீமதுரைவீரதுரையும், ஸ்ரீ வாழவைக்கும் வண்டித்துரை கருப்பசாமியும், ஸ்ரீஐயானார் அப்பனும் அன்னையர் வேண்டுதலுக்கு அருள்புரிந்து உலகத்தில் தருமம் தழைக்க பாடுபடும் குலசாமிகளை கொடுக்கட்டும். குருபூர்ணிமாவில் இப்படி ஒரு வேண்டுதல் அமைய வியாசரின் மாகபாரதம் காரணம், திரு.ஜெவின் வெண்முரசு காரணம், துரோணரும் அர்ஜுனனும் காரணம் அவர்கள் அனைவரின் திருவடிக்கும் எனது பணிவான வணக்கம்.
“அவனைப்பிரியமுடியாதகுதிரைவீட்டுவாயில்வழியாகபாதிஉடலைஉள்ளேநுழைத்துகுரல்கொடுக்கும்.இரவில்துயின்றுகொண்டிருப்பவனைஎழுப்பமுற்றத்தில்வந்துநின்றுபெருங்குரல்எழுப்பும்”-மழைப்பாடல்-43