Friday, October 17, 2014

பிரயாகையும் பாஞ்சாலியும்




அன்புள்ள ஜெ,

அடுத்த நாவலின் தலைப்பே பெரும் படிமமாகிறது. ஐவரும் இணையும் ஒரே புள்ளி. வெண்முரசு முழுவதிலுமே பெண்கள் நகர்த்தும் தாயக் காய்கள் தானே ஆண்கள்.
முதற்கனலில் சத்தியவதி. மழைப்பாடலில் குந்தி. வண்ணக்கடலில் கிருபி, ராதை(அதிரதன் மனைவி) மற்றும் ஏகலவ்யனின் தாய். நீலம் முழுக்க ராதை. இப்போது பிராயாகையில் திரௌபதி. பாரதப் போருக்கான அனைத்து வஞ்சங்களும் செழித்து வளரப் போகின்றன போலும். மனம் மீண்டும் மீண்டும் கர்ணனைத் தான் நாடுகிறது. கர்ணன் மீதான திரௌபதியின் எண்ணம் எவ்வாறு இருக்கப் போகின்றது? ஏனோ மனதில் விதுரனும் குந்தியும் வந்து போகிறார்கள். அவர்களுக்கிடையேயான ஓர் புரிந்துணர்வு, நிச்சயம் காதல் தான், குறித்த இடைவெளிகள் பாரதத்தில் உள்ளவையா?

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து

அன்புள்ள அருணாச்சலம்

ஒரு வழியாக இப்போதுதான் எழுத ஆரம்பித்துவிட்டேன்.முதல் தூண்டுதல் கங்கை என்பதுதான். மற்றதெல்லாம் எழுத எழுத வளரவேண்டும்