Wednesday, October 29, 2014

பீமனின் முகம்



அன்புள்ள ஜெ சார்

பிரயாகையில் பீமனின் கதாபாத்திரம் மேலும் துலங்கி வருகிறது. வண்ணக்கடலில் அந்தக்கதாபாத்திரம் பல மர்மங்கள் கொண்டதாக இருந்தது. துரியோதனன் மீதான பிரியம் பிறகு ஏமாற்றம் அடைந்து கசப்பாகிறது. புரிந்துகொள்ளமுடியாதபடி கர்ணன் மேல் கசப்பு வருகிறது. அதற்கெல்லாம் கதைக்கு அடியிலே காரணங்கள் இருந்தன

இப்போது அவையெல்லாம் தெளிவாகிக்கொண்டே இருக்கின்றன. பீமன் வாசுதேவன் நாயரின் இரண்டாமிடம் நாவலில் வருவனைப்போல இருக்கிறார். அதாவது கசப்பும் சுயநிந்தனையும் கொண்டவனாக. அரசு படை பதவி எல்லாவற்றிலும் அவருக்கு ஒரு வெறுப்பு இருக்கிறது

அந்த கசப்பும் வெறுப்பும் போர்க்களத்தில் காத்து நின்று பேசும் காட்சியிலும் நன்றாகவே வெளிவந்துள்ளது. அர்ஜுனனும் பீமனும் தருமனும் இப்போதுதான் தெளிவாகிக்கொண்டே வருகிறார்கள்

மோகன்ராஜ்