Friday, October 24, 2014

பிரயாகை 3 நீதி தேவதை



அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.  தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள். 

மிக மிக மேலே ஏற ஆவலாக இருக்கும், மிக மி உயர ஏறியப்பின்புதான் பயமாக இருக்கும் கீழே இறங்கமுடியாது. மேலேயும் நிற்கமுடியாது. யாராவது வந்து இறக்கினால்தான் இறங்கவும் முடியும். பயமும் போகும். பெருநிலை-3யைப் படித்த பின்பு மிகமிக உயர ஏறிய மனநிலை வந்து தள்ளாட வைக்கிறது.

ஏறியது எவ்வளவு மகிழ்சியாக இருக்கிதோ, எவ்வளவு உயரம் என்ற பயமாகவும் இருக்கிறது. கீழே இறங்காமல் எப்படி எழுதுவேன்.  பிரஸ்னர் கைப்பிடித்துக்கொள்கின்றார்.

மண்ணில் மனிதன்போல தானே பெரும் பாவங்களை உருவாக்கிக்கொள்ளும் மற்றொரு சீவன் இல்லை. உணவுக்காக, பயத்தால் ஒரு சீவன் மற்றொரு சீவனை கொன்றுவிடுகின்றது ஆனால் மனிதன் ஆசைக்காக  கொல்கின்றான். கொலை என்றதும் உயிர்க்கொலை மட்டும் இல்லை, அழகான மலரைப் பார்த்ததும் படுக்கென்று பரித்து, இதழ் இதழாய் பிய்த்து எறிந்துவிடுகின்றான். ஏன் இந்த வெறி? ஏன் இந்த கொலை? இந்த மனிதனுக்குதான் அளவிட முடியாத நன்மைகளை இறைவன் கொடையாகக்கொடுத்து உள்ளான். உலகில் உள்ள அனைத்தும் பொருளாக மட்டும் இருக்க, மனிதன் ஒரு பொருளாகவும் அர்த்தமாகவும் ஆகும் வல்லமையால் வாழ்த்தப்பட்டு உள்ளான். அந்த பெரும் கருணையை எண்ணும்போது கண்ணீர் வராமல் இருக்க முடியுமா? இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் இருக்கும் நிலையை மனிதனும் அடையமுடியும் என்ற பெரும்தகமையை அது மனிதனுக்கு வழங்கி இருக்கும் கருணையை நித்தால் அழாமல் இருக்க முடியுமா?

ஜெ, நீங்கள் யாரோ என்று விழிபிதுங்கி வியர்க்கும் நேரத்தில் நான் யாருமில்லை இதுதோ என்று தலைகோதி விடுகின்றீர்கள்
//பனிவெளியில் அமர்ந்து விண்ணைநோக்கி கண்ணீருடன் வணங்கினார் ிரஸ்னர்மானுடனுக்கு அளிக்கப்பட்டஅப்பெருங்கருணையை எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழ்ந்து மேலும் மேலும் அழுதார்//

பிரயாகை-2ல் சுருசி துருவனிடம் சொல்லும் சொல் //செல். நூல்களைப்படிஅகப்பாடமாக்குதைச்சொல்லிசிறுபாராட்டுகளைப் பெறு// இந்த வார்த்தைகளைக்கேட்கும்போது நேற்று நோகசெய்தது மனம். அழுதவிடத்தான் தோன்றியது.ருசியின் முன்னால் நூல், சொல், அறிவு, ஞானம் எல்லாம் சிறுபாராட்டு உரியவை மட்டும்தானா? ருசி அப்படித்தான் மனிதனை நம்ம சொல்கிறது. மனிதனும் அப்படித்தான் நம்புகின்றான். இலக்கியம் படிக்கிறாயா? வயித்துக்கு என்ன செய்கின்றாய்? என்ற அம்புகளால்தான் தாக்கப்பட்டு விழுகின்றான். ருசித்தோற்றுப்போகும்போது நூல் கண்ணீர்விட வைத்துவிடுகின்றது. ஆனந்த கண்ணீர்.  
செவிக்கு உணவில்லாதபோழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

பிரயாகை-3 மாபெரும் ஞானத்தின் பொக்கிஷம். ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வைரம், திருப்ப திருப்ப ஒளிக்கூடிக்கொண்டே செல்கின்றது அல்லது பயணிக்கும் அளவுக்கு வேகம்கொள்ளும் நதிபோல இழுத்து செல்கின்றது. மொத்தமாக குதித்தால் அடி ஆழத்திற்கு இழுக்கப்பட்டு மூச்சுதிணறலுக்கு ஆளாகின்றேன்.  சுநீதியை மட்டும் பிடித்துக்கொண்டு கரையேறுகின்றேன்.

சுநீதி-தக்க நீதி என்கின்றீர்கள்.  சுநீதி என்பது சுத்தமான நீதி, உயர்ந்த நீதி, கலப்பற்ற நீதி, மாசில்லாநீதி என்றும் பொருள்கொண்டுப் பார்க்கின்றேன்.  கலப்பு இல்லாததாலேயே அது அணியாகமுடியாதது, சிலையாக முடியாதது, இளகக்கூடியது, பலமில்லாதது என்று என்று எண்ணிக்கொள்கின்றேன்.  ஆனால் அதன் சுத்தம் அதற்கு ஒளியாகவும் இருக்கும் அல்லவா?

//என்றுமே அவனை அவள் அறிந்திருக்கவில்லை என்பதுபோலஉயிரும் ள்ளமும் கொண்ட ஒரு மானுட உடல்சிலையென்றாகி விடும் விந்தை முன் அவன் சித்தம் திகைத்து நின்றுவிட்டது//

சுநீதி சிலையாகும் கணத்தில் நீதிதேவதையின் சிலைதான் எனக்கு நினைவில் எழுந்தது. மேற்கண்ட வரிகள் நீதிதேவதையின் குறியீடாகவும், வரிக்கு வரி நீதி தேவதையின் படிமம் உயிர்ப்பெற்று உயிர்ப்பெற்று எழுந்து வந்து அலைக்கழிக்கின்றது. நீதிதேவதையை ஏன் சிலையாகவும், அதுவும் கண்கட்டியும் வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து உறைந்துபோகின்றேன்.

நீதிதேவதையின் வழியாக நீதியிடம் செல்கின்றேன். நீதி எப்படிப்பட்டது. எந்த பாசாங்கும் இல்லாதது. தான் நீதி என்று ஒருபோதும் அசைவாலோ, உடலாலோ உணர்ச்சியாலோ காட்டிக்கொள்வதில்லை. ஆனால் அது ஆன்மா என்னும் ஆண்மகனை மனந்து அவனுக்காக ஏங்கி தவிக்கிறது. நீதி ஞாயத்தை, எளிமையை, அறிவை, உண்மையை, நிலை பெயராமையை பெற்று எடுக்க முயற்சி செய்கின்றது. அதற்காக நீதி கண்ணீர் விடுகின்றது. தனது பணியாளின் பாதத்தில்கூட விழுந்து கண்ணீர் மல்கின்றது. அவன் இன்றி உலகம் இல்லை என்று வலிகொள்கிறது. பொய்சொல்லாதே நான் செத்துவிடுவேன், நல்லசொல் சொல் அதனால்தான் நான் வாழமுடியும் என்று பணியாளின் பாதத்தில் தலைவைக்கிறது.

நல்லசொல் கிடைக்காதபோது, கண்ணீர்வற்றிப்போகின்றது. பலம்இன்றி தவிக்கிறது. தானே தனக்கொரு சுமை என்று நடுங்குகின்றது. காற்றுபோல், காற்றில் ஆடும் துணிபோல் ஆகிவிடுகின்றது. பேதையாகிறது, பேரன்னையாகிறது, பித்தியும் ஆகிறது. அன்பு பெற்று எடுக்கும் அருள்போல, நீதி பெற்றெடுக்கும் உண்மையை தவிர நீதிக்கு ஒரு கதியும் இல்லை. தன்னை புணர்ந்த ஆன்மாக்கூட அதற்கு அந்நியனாகிவிடுகின்றது. யாருக்குமே தேவையில்லை என்பதுபோல் அது எங்கோ வெகுதொலைவுக்கு சென்றுவிடுகின்றது. நீதிக்கு உண்மை அன்றி மண்ணில் ஒன்றும் தேவைஇல்லை, இத்தனை துயருக்கும் பின்னால் நீதி அழிந்தாளா? அழிந்துவிடுவாள் என்றுதான் உலகம் நினைக்கின்றது. நீதி அழிவதி இல்லை. சுநீதி அழிவதில்லை.

எவ்வளவு பெரியக்காடோ அவ்வளவு பெரிய அக்கினி குண்டம் ஆனால் காடு உள்ள மண்ணில் சூரியன் மழையாகின்றான், ஆனால் ஒரு புல்கூட இல்லாத பாலையில் எப்படி அக்கினி குண்டம் ஆனால் அனல்மழை பெய்கின்றான் சூரியன். நீதியும் பாலையின் சூரியன்போல எதுவும் இல்லாத இடத்தில் நின்று எரிகின்றது ஆற்றலாகின்றது. கண்சிவக்கின்றது. சொல்லால் சுடுகின்றது. வாளாகின்றது.
நீதி அவளே நினைக்காத தருணத்தில் ஆட்சிபீடம் ஏறிவிடுகின்றாள். மன்னன் பணிகின்றான். படை, பணியாள் பணிகின்றன. ருசிகூட பணிகின்றது. ருசி பணியும் தருணத்தில் தன்னை தாங்கும் ஒரு  சுவர்தேவைப்படுகின்றது.

//சுநீதியோ துயரத்தால் மேலும் ேலும் ஆற்றல் கொண்டவளானாள்அவள விழிகளில் அனல் சிவந்தது.மொழிகளில் வெம்மை எழுந்தது.தழல்முடி சூடிய கொற்றவை என அந்தப்புரத்தை ஆண்டாள்உருவி பீடத்தில்வைக்கப்பட்ட வாள்போலிருந்தாள்ஒற்றர்களும் படைத்தலைவர்களும் அவளையே பணிந்தனர்ஆணைகளேற்றுகாடுகள் தோறும் அலைந்தனர்//

சுநீதி  ஒரு உண்மையை உணர்ந்துக்கொள்கின்றாள். மன்னனாலோ, படையாளோ, ஒற்றராலோ, ருசியாலோ, ருசியின் மகனாலோ மற்றும் மண்ணில் உள்ள யாராலும் தனது மகனை கண்டுபிடிக்கமுடியாது என்பதை அறிகின்றாள். காரணம் சுநீதியின் மகன் நிலைபெயராநிலை உடையது என்பதை அறிகின்றாள். அது தனது தொப்புள்கொடியை தானே தின்றுவளரக்கூடியது. நிலைபெயராநிலை என்பது, நடுநலை. நீதியின் தொப்புள்கொடி குருதியில்தான் அது வளரமுடியும். மற்றெல்லாம் அதற்கு அசுத்தம். நீதி சுத்தமாக இருக்கவேண்டும். அதற்கு அரசஉடை என்பது மாசு, அணிமணிமாசு, அரண்மனை மாசு. நீதி தன்னந்தனி இருந்தால் மட்டுமே அவள் மகனுக்கு உணவாக முடியும். வளர்க்கமுடியும். காவலாக முடியும். திரு.ஜெ உணர்ச்சியை கூட்டுவதற்காக எழுதிய எழுத்துப்போல் மேலோட்டமாக தெரிகின்றது ஆனால் அதற்குள் நிலைபெற்று இருக்கும் அறத்தை, உண்மையை அறியும்போது. நீதியும், நீதியின் பிள்ளையும் தொடநினைக்கையிலேயே அனலை அள்ளி வாயில் வைத்ததுபோல் இருக்கிறது. நீதி சுடும் என்பது எத்தனை உண்மை.

//விழித்துக்கொண்ட சுநீதி எழுந்து தன் அரச உடைகளை உடலில் இருந்து கிழித்து வீசியபடியே அரண்மனை விட்டுஓடினாள்அவள் சென்ற வழியெங்கும் ஆடைகளும் அணிகளும் பின்பு குருதியும் சிந்திக்கிடந்தன.அரசியல்லாமலானாள்குலமகளல்லாமலானாள்பின் பெண்ணென்றே அல்லாமலானாள்பேதை அன்னைமட்டுமாகி காடெங்கும் அழுதுகொண்டே அலைந்தாள்//

தீ இருட்டை விரட்டிவிடும் என்று எளிதாக சொல்லிவிடுகின்றோம். தீக்குதான் தெரியும் தீயாக இருந்தால் எப்படி எரிந்தாகவேண்டும் என்று. நீதி பொய்யை விரட்டிவிடும் என்கிறோம், நீதி நீதியாக இருக்கப்படும்பாடு? சுநீதிக்குதான் தெரியும் நிலைபெயராநிலையில் இருக்கும் தனது மகனின் வலப்பக்கம் அமர அவள் யாருடன் சேர்ந்து பிள்ளைப்பெற்று அந்த பிள்ளையோடு இணைய அவள்படும்பாடு.

நீதிதவறும்போது நீதி செத்துவிடும் என்று நினைக்கும் மனிதன் இந்த உண்மையை உணர்ந்துக்கொள்ளவேண்’டும்.

//ஒவ்வொருவரும் அவளுடைய முடிவிலா ஆற்றலை உணர்ந்தனர்அவளறியாத ஏதும் எங்குமிருக்கஇயலாதென்பதுபோலஆடையில்லாது மட்டுமே அவள் முன் சென்று நிற்கமுடியும் என்பதுபோலஉத்தானபாதன்அவள் கூர்மையை அஞ்சினான்பேருருவை சுருக்கி ஓர் எளிய அன்னையாக அவள் தன் முன் வந்து நிற்கலாகாதாஎன ஏங்கினான்இடைநாழியில் அவள் நடந்து செல்கையில் அறியாது எதிரே வந்த சுருசி அஞ்சி சுவரோடு சாய்ந்துின்று கைகூப்பினாள்//

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

அன்புள்ள ஜெ நான் மிகமிக சிறியவன் உங்கள் சுநீதியின் முன் நானும் அஞ்சுகின்றேன். கைதொழுகின்றேன். சுநீதி என்றும் என்னுடன் இருக்க பிராத்திக்கின்றேன்.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்.