Thursday, October 16, 2014

வண்ணக்கடல்- கண்ணீர் -ராமராஜன் மாணிக்கவேல்
வண்ணக்கடல்-4, ஜுன்-04-2014


நெல்லுக்காக மழை பெய்கின்றதா?புல்லுக்காக மழை பெய்கின்றதா?
சிந்திக்க முடிந்ததாலேயே எதையும் தனக்கு சாதகமாக சிந்திக்கும் மனிதன் நெல்லுக்காக என்கின்றான்.

மறைதேடும் பாதையில் நடந்துக்கொண்டு, மறைபேசும் வாய்போடு பித்தாகவும் இந்தபடி மறைகளுக்கும் அப்பால் இருக்கும் இறைவன் புல்லுக்காகத்தான் மழையை பெய்விக்கின்றான் என்பதை நேற்று திரு.ஜெ சிந்தனையை புரட்டிப்போட்டபோது விசும்பின் வீரியம் தெரிகின்றது 


இந்திரவீரியம்புல்லுக்குப்பொசியும்வழியில்நடுவேசிலர்முதுகொடியப்பாடுபட்டால்நெல்லுக்கும்பொசிவதென்பதுவிண்ணின்விதி

விண்ணின் விளையாடல் மண்ணில் நடக்கும் தருணத்தில் எவரும் அதன்முன் ஆடுகாய் அன்றி வேறு எதுவும் இல்லை.

இருமைகள் நிறைந்த மண்ணில் நொடிக்குள் இருமையாக பிளக்கும் பெண்ணின் சிறப்புதான் அவர்களை அன்னையாகவும், தெய்வங்களாகவும் மண்ணை ஆளவைக்கின்றது என்று நினைக்கின்றேன்.

மண்ணில் வேர் ஊன்றி விண்ணைத்தொடும் மரம்போல இயற்கையோடு ஐம்புலன்களால் இணையும் பாண்டவர்களை நோக்கும்போது தன் மனநதியில் தானே விழுந்து நீண்டுபெருகும் எண்ணங்களின் நாகமாகிய கார்கோடனுடன்  மொழியுத்தம் செய்து முதல்மகனை வெட்டி எறிந்துவிடுகிறாள் குந்தி.

மண்ணை வெல்லத்தான் குந்தி நினைக்கிறாள் அது முதல் மகனால் கைகூடும் என்றபோதும் அவள் ஏன் பாண்டவர்களை தேர்ந்து எடுக்கிறாள் அதுதான் அன்னை.காணமகனுக்கு கண்ணீரும், காணும்மகனுக்கு குருதியும் கொடுப்பதிலேயே அவள் அகம் நிறைக்கின்றது.அதுதான் பேரறிவும் பெரும்பேதைமையும் கொண்ட கனிவாக அவர்களை ஆட்டுவைக்கின்றது.

யாதவ சிறுமிகாவும், அன்னையாகவும் நிற்கும் இருவேடத்தில் குந்தி அன்னையின் பாத்திரத்தையே தேர்ந்து எடுப்பால் என்பதை காட்டும் காட்சி அழகு.
யார்இவர்கள், என்னசெய்யவிருக்கிறார்கள்எனஅவளுக்குள்வாழ்ந்தயாதவச்சிறுமிதிகைத்தாள்.மறுகணமேபின்தங்கியகுட்டிஅன்னையைநோக்கிஓடுவதுபோலதன்னைநோக்கிதானேஓடியணைந்தாள்இந்த இடத்திலேயே அவள் யாதவ சிறுமியை கைவிடும்போதே முதல்மகனையும் கைவிட்டுவிடுகின்றாள் அதை பின்னால் கார்கோடன் முன்புதான் அறிந்திருப்பாள்.

அறிமுகப்படுத்தும்போது தருமனில் ஆரம்பித்து சகாதேவனில் முடித்து, அவர்களைப் பற்றி விவரிக்கும்போது சகதேவனில் இருந்து ஆரம்பித்து தருமனில் முடிப்பதுதன் மூலம் உலகம் மட்டும் அல்ல பாண்டவர்களும் ஒரு வட்டம் என்று காட்டுகின்றார் திரு.ஜெ.

சகாதேவன் நிகரற்ற அழகன் என்பதை வர்ணிக்கும் இடம் தேன் அதிகம் கொண்ட கவிதைநிறைதுளித்தேனுடன்பிங்கலன்என்னும்தேனீஅவனைக்கண்டுஅருகேவந்துஅவன்கண்களைநோக்கியபின்சுழன்றுவிலகிச்சென்றது. தன்கூடுசென்றுதேனைச்சொட்டியபின்தோழர்முன்நின்றுதான்கண்டபேரழகனின்விழிகளைவிவரிக்கநடனமொன்றைத்தொடங்கியது

எந்த நகைச்சுவைக்கும் கண்ணீர்தான் முடிவாக நிற்கும் என்பதேபோல் நேற்றுவரை தொடர்ந்த பகடிகள் எல்லாம் இன்று கதிரின்முன் பனியாகிவிட்டது.