Wednesday, October 8, 2014

என்ன செய்வேன்?




ன்புள்ள ஜெ

சற்று வேலைப் பளு. தவிர நாளை எழுத வேண்டும் என்கிற தள்ளிப் போடல். வெகுநாட்களாக எழுதவில்லை. 

நீலத்தில் என்னைத் தொலைத்து விட்டேன். 

உங்கள் எழுத்து, சுவாமி, ராமராஜன் மாணிக்கவேல் மற்றும் பல வாசகர்கள் பங்களிப்புடன் - ஒரு மிகவும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவம். அதுவும், சமீபத்தில் மரபின் மைந்தன் முத்தையாவின் தொடர்.. புதிய பரிமாணங்களுக்கு  அழைத்து செல்கிறது.

மீண்டும்  படிக்கத் தூண்டும். எழும் பல எண்ணங்களில் ஒன்றிரண்டு..

இறைவனிடம் காவலாளியாக இருக்கலாம்,அல்லது தொண்டனாக இருக்கலாம். காவலாளியாக  இருந்தால்,கடவுளைக் காக்கவேண்டும் - தொண்டரிடமிருந்து :). தொண்டர்கள் சாபமிடலாம். தொண்டர்களை அரக்கராக வந்து நல் வழிப் படுத்தலாம்.

இறைவனே ஆயுதம் ஏந்தி வந்தால் - அதற்காக எதையும் செய்யலாமே - எனத் தோன்றுகிறது -    பக்தியின் வெளிப்பாடாகவே!

புரந்தர தாசரின் -பாடல்  (கன்னட) -  நினைவில் தோய்கிறது 

அபராதி நானல்லா 
அபராத ஹெனகில்லா ..
கபட நாடக சூத்ரதாரி ! நீனே!

...

ஏனு மாடிதரேணு ..  ப்ராண நினதே ஸ்வாமி ..

...

என்னும் உருக்கமே நிறைகிறது .. எங்கும்..

வாசகர்களின் கடிதமும் நாவலின் ஒரு முக்கிய பகுதியாக நிறைகிறது. கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கேட்கும் போது - நாமும் மனதில் இசை எழுப்பி மகிழலாம். இசை தெரிந்து இருந்தால், அனுபவம் பல மடங்கு பெருகும் என்பதைப் போலவே..

மழைப் பாடல் கையில் கிடைத்தது. நன்றி. குழந்தை வைஷ்ணவி படங்களை விரும்பி பார்த்தாள். சில பாத்திரங்களை  கண்டு கொண்டாள். மழைப் பாடலின் கருத்தை.. என்னிடம் என்னிடம் கேள்வி கேட்டே அறிந்து கொண்டாள் ( பூக்கள் மலரும், செடிகள் வளரும், வானவில்  வரும்.கூடவே மரவட்டை வரும் - அவளுக்கு பயம் - வியாதிகள் வரும் என ) 

சிறுவருக்கான மகாபாரதம் - உங்கள் ஓவியங்களில் உள்ளதை - மனதில் ஊர்ஜிதம் செய்து கொண்டேன் 

மிகுந்த அன்புடன்.
முரளி