Wednesday, October 8, 2014

கண்ணனெனும் குழந்தை



ஜெ சார்

நீலம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நேற்று இரவு சமநிலத்திற்கு வந்த நீரோடை போலிருந்தான். உடலின் அத்தனை பக்கங்களாலும் ததும்பினான். என்ற வரியை வாசித்து மெய்மறந்து நீண்டநேரம் அமர்ந்திருந்தேன். தவழும் சின்னக்குழந்தை அப்படித்தான் தண்ணீர் ஓடிவருவதுபோல வரும் என்னசெய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் பார்க்கும். நினைத்த திசையில் பாய்ந்து போகும். அற்புதமான உவமை.

காலாகாலமாக குழந்தைகளை வர்ணித்துக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனைக்குப்பிறகும் இப்படி புதிய உவமைகள் இருக்கின்றன என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. குழந்தையை கண்முன்னால் பார்க்கிற பரவசம் ஏற்பட்டது. இவனுடலில் ஆயர்குடியின் அத்தனை நறுமணமும் வீசுகின்றது. முற்றிலும் சத்தியமான விஷயம். அம்மாக்கள் பிள்ளைகளை தூக்கியதுமே முகர்ந்து பார்ப்பார்கள். எங்கெல்லாம் போயிருக்கிறது என்று தெரியும். நம்பமுடியாத வாசனை எல்லாம் வரும்.

அப்படியே வாசித்துப்போகிறபோது கண்ணன் நம் கையிலே இருக்கிற குழந்தையாக ஆகிவிடுகிறான். உடனே இருளன்றி பொருளாக ஏதுமில்லா இருப்பே. இருமையென ஒன்றும் எஞ்சாத இருளே. ஒளியை கருக்கொள்ளும் வெளியே என்ற வரி வரும். உடல் சிலிர்த்துவிடும். நாம் கையிலே வைத்திருக்கும் குழந்தை கடவுள்தான் என்று தோன்றும்

எல்லாகுழந்தையுமே கடவுள்தானே என்றும் நினைத்துக்கொண்டே