Sunday, October 5, 2014

பாவம் கண்ணன்




ஜெ சார்

நீலம் நாவலை வாசிக்கும்போது கண்ணன் அடிக்கடி தன் குட்டித்தொப்பையைத் தொட்டு ‘கண்ணன் பாவம்’ என்று சொல்வதை மகிழ்ந்து சிரித்தேன். என் அம்மாவுக்கும் அந்த வரி மிகவும் பிடித்திருந்தது. வெண்ணை திருடித்தின்றுவிட்டு கண்ணன் அதைச் சொல்கிறான். மண்ணைத்தின்றுவிட்டும் சொல்கிறான்

ஆனால் கடைசியில் ரத்தத்தில் மதுராவை கழுவிவிட்டு நிற்கும்போது அந்த வரி ஞாபகம் வந்தது. அம்மாவிடம் போனில் கேட்டேன். அவளுக்கும் அந்த வரி ஞாபகம் வந்தது என்று சொன்னாள்

மனிதர்கள் பாவத்தில் அழுக்காகும்போது ரத்த்தை கொண்டுவருகிறான் கண்ணன். அவன் பாவம்தான் என்று தோன்றியது. நான் நினைப்பது தப்பாவும் இருக்கலாம். ஆனால் அந்த வரி எனக்கு பெரிய அனுபவத்தை தந்தது

கன்ணனின் சின்னவயசு லீலைகளை இன்னும்கொஞ்சம்எழுதியிருக்கலாமோ என்று தோன்றியது

சுகந்தி