ஜெ
வெண்முரசு
விவாதங்கள் இணையதளத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். ஒருநாளில் நாலைந்து பதிவுகள்
வருகின்றன. தற்செயலாக ஸ்கோர்ல் பண்ணி கீழே போனபோதுதான் அவற்றைப்பார்த்தேன். அவற்றை
இப்படி அள்ளிக்குவிப்பதுபோல வெளியிடாமல் ஒன்றிரண்டாக வெளியிட்டால் என்ன?
நிறைய
கடிதங்கள் அற்புதமானவை. சுவாமி, ராமராஜன் மாணிக்கவேல், சண்முகம், அருணாச்சலம் நெதர்லாந்து
போன்றவர்களின் கடிதங்கள் நீலம் நாவலை வேறுவேறு கோணங்களில் புரிந்துகொள்ள
உதவிசெய்பவை. நான் அதிகமாக கிளாஸிக்ஸோ அல்லது பக்தி இலக்கியமோ வாசிக்காதவன். ஆகவே
இக்கடிதங்கள் தரும் ரெஃபரன்ஸ் எனக்கு மிகவும் முக்கியமானது.
முன்பே நிறைய
நல்ல கடிதங்கள் வந்திருப்பதை கண்டேன். செப்டெம்பரில் மட்டும் நூறு கடிதங்கள்.
அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அவற்றையெல்லாம் அனைவரும் வாசித்திருக்கவேண்டும்
அல்லவா
மணிரத்னம்
வசந்தபாலன் எல்லாம் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். கடிதங்களை இப்படி மொத்தமகா
போடாமல் இரவு 12 மணிக்கும் சரியாக இரண்டுகடிதங்கள் வீதம் போடலாமென்று நினைக்கிறேன்
விக்னேஷ்
அன்புள்ள
விக்னேஷ்
வெண்முரசுவிவாதங்கள்
இணையதளம் ஒரு ‘கடிதக் கிடங்கு’ ஆகவே உத்தேசிக்கப்பட்டது. உதவிகரமான, நல்ல
கடிதங்கள் எல்லாம் அப்படியே என் கடிதப்பெட்டியில் இருக்காமல் ஓர் இணையதளத்தில்
இருக்கட்டும் என்பதற்காக. தினம் இரண்டாயிரம்பேர் அதை வாசிக்கிறார்கள். அவர்கள்
வெண்முரசு வாசித்துவிட்டு மேலே வாசிக்க தேடிவருபவர்கள். அவர்களுக்குரியது அது
ஜெ