Tuesday, October 7, 2014

வண்ணக்கடலின் கட்டுமானம்


[18 days. கிரான் மோரிசன். ஓவியவரிசை]


அன்புள்ள ஜெமோ சார்

வண்ணக்கடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாவல் தொடராக வந்தபோது வாசித்தபோது எனக்கு பலவிதமான இடறல்களை அனுபவித்தேன். இளநாகன் கதையில் சுவாரஸ்யம் ஏறிவரும்போது அது முடிந்து ஹஸ்த்னபுரியின் கதை தொடங்கும். அந்தக்கதையில் ஆர்வம் வரும்போது அது முடிந்து இந்தக்கதை ஆரம்பிக்கும். ஏன் இப்படி வெட்டிவெட்டிச்சொல்லவேண்டும் என்ற எண்ணம் இருந்தது

மொத்தமாக வாசிக்கும்போது அந்த பெரிய ப்ளூபிரிண்ட் கன்ணுக்குப்பட்டு ஆச்சரியம் ஏற்பட்டது. நல்லவேளை அவசரக்குடுக்கை மாதிரி உங்களுக்குக் கடிதம் எழுதாமலிருந்தேன் என்று நினைத்தேன். கதையின் ஓட்டத்துக்குப்பதிலாக அந்த நிலைமையின் ஒரு ஒட்டுமொத்தத்தை மட்டும்தான் சொல்ல நினைக்கிறீர்கள் என்று தோன்றியது.

பாலி-- ஸுக்ரீவனில் இருந்து பீமன் துர்யோதனன் கதைக்குச் சென்ற இடத்தில் தான் அந்த நினைப்பு வந்தது. அடாடா கதைகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டிருக்கின்றதே என்று நினைத்தேன்.இந்தக்கதை அந்தக்கதையின் ஃபில்லர் மாதிரி இருப்பதை கண்டுகொண்Architectonic டேன்

இப்படி ஒரு வெட்டு இல்லாமல் நேரடியாகக் கதையைச் சொல்லியிருந்தால் மிகவும் ஃப்ளாட் ஆக இருந்திருக்கும் என்றும் தோன்றியது. இந்த இடைவெட்டு காரணமாக கதையில் ஒவ்வொரு இடத்திலும் வாசகனுக்கு கவனம் வருகிறது. பெரிய போராக பின்னாடி வரப்ப்போகும் விஷயங்கள் எப்படி சின்ன ச்சின்ன விஷய்ங்களாக ஆரம்பிக்கின்ற என்ற எண்ணத்தில் இருந்து இதெல்லாம் இந்தப் ப்ரபஞ்சத்தில் எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்ற எண்ணம் நோக்கி போகமுடிகிறது

அதோடு எவ்வளவு துல்யமாக இந்த  கிரேட்டர் பிளான் வகுக்கப்பட்டிருக்கிறது என்று ஆச்சரியப்பட்டேன்.  Architectonic excellence இல்லாமல் காவியமே கிடையாது. அதை திட்டமிட்டு எழுதுகிறீர்களா சரியாக அதுவே வந்து விழுகிறதா என்று தெரியவில்லை. சரியாக இந்தியாவுக்குமேலே போகும் பயணத்தில் தமிழகத்தில் பூதவழிபாடு [சதுக்கப்பூதம்] இருக்குமிடத்தில் சாங்கியம் வருகிறது. காளத்தி வரும்போது ஆதிசைவம். கொனாரக் வரும்போது சூர்யன்.

அதேபோல சாங்கியம் சொல்லப்படும்போது அன்னமும் அதிலிருந்து பீமனும். சைவம் சொல்லப்படும்போது மகாகுரோதமும் அதிலிருந்து துர்யோதனன். வைசேஷிகம் சொல்லப்படும்போது மழைபெய்யும் துறைமுகம். அங்கிருந்து புல்லை கையிலே ஏந்திய த்ரோணர். கொனாரக்கில் இருந்து  சூர்யன். நேராக கர்ணன். அங்கிருந்து ஆசுரநாடு[ இன்றைக்குள்ள  சம்பல்] ஆசுர நாடு வழியாக ஏகலைவன். இந்தியாவே இந்தக்கதைக்காக ஏற்கனவே சரியாக அமைந்திருப்பதுபோல தோன்றிவிட்டது.

உங்களுக்குத் தெரிந்துதான் எழுதியிருப்பீர்க்ள். ஹஸ்திபூர், ஹாத்திப்பூர் என்ற பெயர் கொண்ட பல ஊர்கள் ஆசுரம் என்கிற ஜார்கண்ட் பகுதிலேதான் உள்ளன.

இந்தியாவே மகாபாரதமாக மாறியிருப்பதுபோன்ற பிரமை எனக்கு வந்தது. இவ்வளவு கிராண்டாக ஒரு நாவலை கற்பனைசெய்த்ருப்பதை நினைத்தால் வாசகன் எந்த அளவுக்கு தன்னை தயார்பண்ணி வைத்திருக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது

நன்றி

ஸ்ரீனிவாஸ்