Thursday, January 3, 2019

கைவிடுதல்


ஜெ

நேற்று என் டைரியில் இந்த வரியை குறித்து வைத்தேன்

தெய்வங்களின் ஆடலில் ஒரு நெறி உண்டு. தெய்வங்கள் அளித்ததில் நிறைவுகொள்ளாமலேயே நாம் புதியது கோருகிறோம். எனவே அரியதை கொடுத்தே சிறியதை பெறுவோம்!

நினைக்க நினைக்க பெருகிக்கொண்டே இருக்கிறது இந்த வரி. என் வாழ்நாள் முழுக்க நான் என் பிறப்பால் சூழலால் அடைந்த அனைத்தையும் விட்டு இன்னொன்றுக்காகத் தேடினேன். உலகின் ஒரு கோடியில் தன்னந்தனிமையில் வாழ்கிறேன். இன்று நான் எதை அடைந்தேன் என்று பார்க்கையில் தோன்றுகிறது அரிய பலவற்றை கைவிட்டுவிட்டே நான் இதை அடைந்திருக்கிறேன் என்று

தெய்வங்கள் அளித்ததை வேண்டாம் என்று சொல்லிவிட்டுத்தான் மனிதன் பூமியில் தானே சிலவற்றை தேடிக்கொள்கிறான். ஆகவே கைவிடுவனதான் பெரிதாக இருக்கும்

ஆனால் இனி அதை எண்ணி பெருமூச்சுதான் விடமுடியும்

ஸ்ரீனிவாஸ்