அன்புள்ள ஜெ
நீலம் 37ஆம் அத்தியாயத்தை வாசித்ததும் என் மனதில் வந்தது நூரம்பர்க் விசாரணை தான். அதைப்பற்றி நீங்கள்கூட பின்தொடரும்நிழலின் குரல் நாவலிலே எழுதியிருக்கிறீர்கள். நூரம்பர்க் விசாரணை சமயத்திலே அரசாங்க ஊழியர்கள் அரசாங்கம் சொல்வதை செய்யவேண்டும் இல்லையா என்றுதான் வாதிட்டார்கள். அரசாங்கம் கேஸ் சேம்பர்ஸ் அமைத்தால் அங்கே வேலைசெய்தது தப்பா என்று கேட்டார்கள். ஆனால் அதை நீதிபதிகள் ஒப்புக்கொள்ளவில்லை. மனசாட்சி என்று ஒன்று ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும் என்று சொன்னார்கள். அந்தமனசாட்சிக்கு முற்றிலும் விரோதமாக ஒரு விஷயத்தைச் செய்பவன் எவனாக இருந்தாலும் குற்றவாளிதான் என்று சொன்னார்கள். கிருஷ்ணன் அதைத்தான் அறம் என்னும் தெய்வம் என்று சொல்கிறார்
விஜயகுமார்
அன்புள்ள ஜெ
கிருஷ்ணனை சிம்மத்துக்கு உவமை செய்த பகுதி மெய்சிலிர்க்கவைத்தது. ஏசுவைக்கூட ஜுடாயா சிங்கம் என்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். யானைமஸ்தகம் பிளந்து செல்லும் சிம்மத்தைப்பற்றி காளிதாசன் எழுதியிருக்கிறார். அதை நான் பள்ளியில் வாசித்துள்ளேன். சிம்மம் தீயின் வடிவம். அது ஒரு ultimate power . ஆகவேதான் அதைச் சொல்கிறார்கள். நரசிம்ம வடிவம் என்று மனசுக்குள் கும்பிட்டேன்.
அதோடு ‘ஸ்வயமேவ ம்ருஹேத்ரதா’ என்ற வரியின் தாத்பரியமும் புரிந்தது. கிருஷ்ணன் அவனுடைய சொந்த வலிமையால் தலைவனாக ஆகிறான். காட்டிலே சிம்மம் தலைவனாக ஆவதுபோல
சாரதி
முதற்கனல் பற்றி மரபின்மைந்தன் எழுதும் விமர்சனத் தொடர்