Thursday, October 2, 2014

வசந்தபாலன் கடிதம்




அன்பு ஜெ

நீலம் மலர்ந்த நாட்கள் படித்து விட்டு மிக வருத்தமாக இருந்தது.
ஆழ்ந்து போசிக்கிற ஒவ்வொருவரும் அனுபவிக்கிற மனக்குழப்பம்.நானும் பல நாட்களில் இது போன்ற மனக்குழப்பத்தை அடைந்திருக்கிறேன்.உங்களின் மனச்சிக்கலின் வலி உணரமுடிகிறது.ஆனால் அதனால் ஏற்பட்ட பித்து நிலை ஆவேசம் கொள்ளவைக்கிறது.ஒவ்வொரு கலைஞனும் அடையவேண்டிய பித்துநிலை தான் இது என்று தோன்றுகிறது.இதை அடையாமல் மேலோட்டமாக எழுதிவிட்டு போக நீங்கள் என்ன பல்ப் ரைட்டரா.சமநிலை தவறி இந்த பித்துநிலை ஏற்படாவிட்டால் ஏன் வெண்முரசு எழுதவேண்டும் ஏன் ஆழ்மனங்களுடன் விளையாடவேண்டும்.பீமனாகவும்சகுனியாகவும் குந்தியாகவும் அர்ச்சுனனாகவும் ராதையாகவும் சூதனாகவும் இருப்பது என்ன சாதாரணமனிதர்களுக்கு கைகூடும் ஒரு நிலையா.இந்த எழுத்து இந்த நுரற்றாண்டு தாண்டி அடுத்த நுரற்றாண்டுக்கு செல்ல வேண்டியது.இந்த எழுத்துக்கு நாம் விலை கொடுக்க வேண்டியது நம் கடமை.பித்து நிலை தொடரட்டும்.பித்து நிலையை கண்டடைந்த தெளிவு பிறக்கட்டும் உடல்நிலை மனநிலை குணமடையட்டும்.