Monday, October 6, 2014

மகாபாரதம் இனி...

அன்புள்:ள ஜெமோ சார்

நான் முதற்கனல் முதலே வெண்முரசை வாசித்துவந்தாலும் நீலம் வந்த்பிறகு தான் கதாநாயகன் உள்ளே நுழைந்துவிட்டான் என்ற உணர்வினை அடைந்தேன். ராம அவதாரம் சிக்கலே இல்லாதது. அவரது நடத்தையில் சில இடங்களைப்பற்றித்தான் நாம் கேள்விகேட்க முடியும். உதாரணம் வாலிவதை. ஆனால் கிருஷ்ண அவதாரம் ஏகப்பட்ட சிக்கல்களை கொண்டது. அவற்றை புராணங்களில் எல்லாம் பகவானின் லீலை என்று சொல்லி சப்பைக்கட்டு கட்டுவார்களே ஒழிய சரியான விடைகளைக் கண்டுபிடிப்பது கடினம். வெண்முரசு கிருஷ்ணனை எப்படிக் காட்டப்போகிரது என்று ஆவலாகக் காத்திருக்கிறேன்

சிவகுமார்



மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

நீலம் முதல் மகாபாரதத்தின் போக்கு மாறுகிறது என்று நினைக்கிறேன். கிருஷ்ணனின் வரலாறு இன்னும் பெரியது. இங்கே மதுராவை கைப்பற்றியதுடன் அது முடிந்துவிடுகிறது. ஆனால் இனிமேல்தான் மகதத்துடன் சண்டை வருகிறது. துவாரகைக்கு இடம்பெயர்கிறார்கள். அதெல்லாம் எப்படி வரப்போகிறது என்று ஆவலாக இருக்கிறேன்

சண்முகசுந்தரம்


அன்புள்ள ஜெ

மகாபாரதக்கதை கதையாகத்தான் என் நினைவிலே இருந்தது. கதாபாத்திரங்களின் குணங்கள் நினைவிலே இருந்தன. கூடவே கதையின் சில இடங்களும்/ ஒட்டுமொத்தமாக மகாபராதத்தை கதையாகச் சொல்லு என்று யாராவது கேட்டால் நின்றுவிட்டிருப்பேன். எனக்கு அப்படி ஒரு ஒழுக்காக கதை தெரியாது. வெண்முரசு வந்தபின்னர்தான் எல்லா முடிச்சுகளையும் சரியாக இணைத்து சரியான ஒரு மகாபாரத்த்தை அடைந்திருக்கிறேன். அடுத்த நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

ராமச்சந்திரன்


மரபின் மைந்தன் எழுதும் தொட்ர் முதற்கனல் பற்றி