அன்புள்ள ஜெமோ
முதற்கனல் நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை மழைப்பாடலுடன் ஒப்பிட்டுவாசிப்பது முக்கியமான அனுபவம்.
முதற்கனலில் வரும் முக்கியமான கதாபாத்திரமென்றால் விசித்திர வீரியன் தான் விசித்திரவீரியனின் குணச்சித்திரத்தைப்பற்றி விரிவாக மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.
விசித்திரவீரியனின் மகன் தான் பாண்டு. ஆனால் மழைப்பாடலில் வரும் பாண்டு வித்தியாச்மானாவனாக இருக்கிறான். இருவருக்கும் ஒரே நோய்தான் ஒரேவகையான வாழ்க்கைதான். ஆனால் இருவருடைய குனச்சீத்திரமும் வேறுபட்டிருக்கின்றன. விசித்திரவீரியன் தன்னைத்தானே கிண்டலும் கேலியும் செய்துகொள்ளக்கூடியவன் சிரிக்கத்தெரிந்தவன் ஆனால் பாண்டு ஒரு பொம்மை போல இருக்கிறான். விசித்திரவீரியன் உணர்ச்சிகரமானவன் ஆனால் அந்த உனர்ச்சி உள்ளுக்குள் இருக்கிறது. பாண்டு உணர்ச்சிகளை அப்படியே வெளிக்காட்டுபவனாக இருக்கிறான்.அ வனுடைய மனம் செயல்படும் விதமே வேறுமாதிரி இருக்கிறது.
விசித்திரவீரியனின் உடல் fragile ஆனது. ஆனால் மனம் உறுதியாக இருக்கிறது பாண்டுவின் மனமும் fragile ஆக இருக்கிறது. அதிலே உறுதியே இல்லை. அம்பையைப்பார்க்க குகைக்குள் போகும் விசித்திரவீரியனைப்போல ஒரு சந்தர்ப்பத்தை பாண்டுவால் carry over பண்ண முடியாது என்று தோன்றுகிறது
இதற்குக்காரணம் விசித்திரவீரியனை சத்யவதி வளர்த்தாள். அவள் மிகவும் தன்னம்பிக்கை கொண்டவள் மகனை சுதந்திரமாக விட்டாள். ஆனால் அம்பாலிகை மடியிலேயே வைத்து கொஞ்சி பாண்டுவை வெரும் பொம்மையாக ஆக்கிவிட்டாள் இந்த நுட்பமான வேறுபாட்டுடன் இருகதாபாத்திரங்களும் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஒரேமாதிரியான இரு கதாபாத்திரங்களுக்குள் இப்படி நுட்பமான வேறுபாட்டைக்காட்டியிருப்பதை எண்ணி ஆச்சரியபட்டேன்
செந்தில்
முதற்கனல் கடிதங்கள்
வெண்ணி கடிதம்
கனவுப்புத்தகம் கேசவமணி
அழியா அழல் சுநீல்கிருஷ்ணன்
முதற்கனல் தலைப்புகள்
தாட்சாயணி
அம்பையும் ரஜோகுணமும்
தாயும் தாய்மையும்
கனமாகும் கணங்கள்
கமக்கனல்
பத்மநாபபுரம் அரவிந்தன்