Friday, January 8, 2016

இருண்டகதைள்




அன்புடன் ஆசிரியருக்கு                              
       வழக்கம் போல் இன்றும்  வெய்யோன்  வாசிப்புடனே தொடங்கியது.  ஹேகய குலத்திற்கும் பார்கவ குலத்திற்குமான பழி வளரும்  தருணங்களே இதுவரை  வெண்முரசினுள்  மிக நெருடலான  ரீசனிங் தோற்கக் கூடிய  பகுதியாக  எனக்கு  இருந்து  வந்தது. ஆனால்  தீர்க்கதமஸின்  அத்தியாயங்கள் அந்நெருடலை துளியாக்கி விட்டன  எனலாம். கலங்கிய  மனநிலை  என்பதை  என்னால்  ஏதோவொரு விதத்தில்  புரிந்து  கொள்ள முடிகிறது. 

சுரேஷ் பிரதீப்