Wednesday, October 3, 2018

முழுமையான பார்வை

வெண்முரசின் கட்டமைப்பு


அன்புள்ள ஜெ

வெண்முரசு பற்றிய முழுமையான பார்வையை அளிக்கும் கட்டுரை நேற்று வந்த கடிதம்.வெண்முரசின் கட்டமைப்பு. ஒரு விரிவான பார்வையை அது அளித்தது. நானும் இதை அடிக்கடி நினைப்பதுண்டு. வெண்முரசு இப்படிப்பிரம்மாண்டமாகக் கட்டமைக்கப்படுகிறதே அனைத்து நாவல்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை உருவாக்கும் பார்வையை யாராவது எழுதியிருக்கிறார்களா என்று

அன்றன்று வரும் கடிதங்கள் மிகவும் உதவியானவைதான். அவை வராவிட்டால் பலவகையான நுட்பங்களைக் காணாமல் மறந்துவிட்டிருப்போம். அவை சுட்டிக்காட்டியமையால்தான் பல விஷயங்களை நான் கண்டேன். ஆனால் நுட்பங்களை வாசித்தால் ஒட்டுமொத்தப்பார்வை வராமலாகிவிடுகிறது. அதைத் தனியாகவாசிக்கவேண்டியிருக்கிறது. அந்தப்பார்வையை அளித்த அற்புதமான கட்டுரை அது

மகேந்திரன்