ஜெ
பெண் ஆணை ‘நிர்வாணமாக’
பார்க்க விரும்பவில்லை என்பதன் அடையாளமே ஊர்வசி புரூரவஸை நிர்வாணமாக வரக்கூடாது என்று
சொல்வது. அது ஒரு குறியீடு. பெண் ஆணை பலவகையான கற்பனைகள் வழியாகவே கணவனாக ஏற்று முழுமையாக
அவளை அர்ப்பணிக்கிறாள். அவன் வெறும் மனிதனாக நிர்வாணமாக நிற்கும்போது அதன் பின் அவளால்
அப்படி அர்ப்பாணிக்க முடியாது. ஆகவேதான் ஊர்வசி திரும்பிச்செல்கிறாள்
இதுதான் நான் அந்தக்கதையிலிருந்து
ஊகித்தது. அந்தப்புதிர் அந்தக்கதையை அழகாக ஆக்குகிரது. அப்படியே விட்டுவிடலாம். ஆனால்
யோசிக்காமலும் இருக்கமுடியவில்லை
வி.பிரபாகர்