Thursday, March 16, 2017

வர்ணாசிரம தர்மம்



ஜெ

வெண்முரசு நாவலில் வர்ணாசிரம தர்மம் பற்றி பலவகையான விவரிப்புகள் வந்துள்ளன. அது கட்டற்ற பழங்குடி வாழ்க்கையிலிருந்து ஓர் அமைப்பை உருவாக்கிக்கொள்வதற்ககா அரசுகள் உருவாவதற்காக உருவாக்கப்பட்டதென்று முன்னரே வந்தது. இன்றைக்கு போரைப்பற்றிய காட்சியில் அதன் முகம் தெரியவருகிறது. பல்வேறு இனக்குழுக்களை ஷத்ரியர் என்னும் ஒரே வர்ணமாக ஆக்கி பொதுவான பண்பாக போரிடும் மனநிலையை உருவாக்கியதனால்தான் குருநகர் ஜெயிக்கிறது. வர்னாசிரமம் இல்லாமல் நூற்றுக்கணக்கான குடிகலின் தொகுப்பாக இருப்பதனால்தான் நாகர்கள் தோற்கிறார்கள். கூடவே இப்படி வர்ணமாக ஆவதன் அழிவையும் அதெ அத்தியாயம் விளக்கிவிடுகிறது. சமூகம் ஒரு பிசிறில்லாத போர் இயந்திரமாக அனதே வர்ணாசிரமத்தின் பங்களிப்பு என நினைக்கிறேன்

ராஜன்