Saturday, March 25, 2017

மாமலர் 53 – வேங்கை விடு தூது



கசனுக்கும் தேவயானிக்கும் இடையே நிகழும் காதல் பரிமாறல்கள் இலக்கியத்தில் ஒரு புது விதம். எத்தனையோ விதமான தூதுகளைப் பார்த்திருக்கும் நமக்கு வேங்கை விடு தூது புதிது தான். 

வாழ்வின் தருணங்களை கச்சிதமான தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் வரையறுக்கும் சொற்றொடர்கள் வெண்முரசின் தனிச்சிறப்பு. பொன்றாப் பெருங்காதல் குறித்து இன்று வந்திருக்கும் இக்குறிப்பு அப்படிப்பட்ட ஒன்று.

அத்தனை காதல்களிலும் உள்ளாழத்தில் ஆசிரியனும் மாணவனுக்குமான காதலே அடங்கியிருக்கிறது. கன்னிக்கு ஆசிரியனும் ஆனவனே பெருங்காதலன். மைந்தனுக்கு ஆசிரியனாகிறான் தந்தை. தோழனுக்கு நல்லாசிரியன் தோழனே. கற்றலும் கற்பித்தலும் இன்றி பொன்றாப் பெருங்காதல் நிகழ்வதில்லை”.

அதே போன்றது தான் பிறர் காதலைக் காணும் உள்ளம் கொள்ளும் உவகை பற்றிய இக்குறிப்பு – “காதலை விரும்பாத உள்ளம் இல்லை. அது உயிர்கள் கொள்ளும் களியாட்டு. ஆனால் அதை மானுடரால் ஆடியிலேயே நோக்கமுடியும். நேர்நின்று நோக்கினால் அதன் பித்து அச்சுறுத்துகிறது. அதன் மீறல் பதைப்பை அளிக்கிறது.

ஆம், நம்மால் கட்டற்ற காதலை நம் வீட்டுக்கு வெளியில் மட்டுமே ஆதரிக்க முடியும், ஆடியில் மட்டுமே காண இயலும் வீட்டில் நுழைகையில் அது கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தாக வேண்டும்!!!