சொற்கள் ஏன் ஒன்றுடன் ஒன்று இணைவதே இல்லை?
அவை பொருளென்னும் பிறிதொன்றால் இணைக்கப்படுகின்றன.
அக்கணங்களுக்கு மட்டும்.
விளிம்புரசிக்கொண்டு விலகிவிடுகின்றன.
விண்மீன்கள் ஏன் உரசிக்கொள்வதுமில்லை?
அடிக்கடி வந்துபோகும் புதுக்கவிதைகளில் ஒன்று. ஜெ, விண்மீன்கள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சூரியான்கள். தனி கோள்களும் தனியான வாழ்க்கையும் கொண்ட பிரபஞ்சங்கள். ஒவ்வொரு சொல்லும் அப்படித்தான்
பிரபாகர்