ஜெ
நீலத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன்
ஜெ. மீண்டும் வாசிக்கிறேன். நான் மாமலரை விட்டுவிட்டேன். அதில் பெண்கள் இறக்கும் காட்சி
என்னை நிறைய வருத்தப்படவைத்தது. ஏனென்றால் என் வாழ்க்கைக்கும் அதுக்கும் நிறைய சமானத்தன்மை
உண்டு. நீலம் என்றைக்கும் எனக்குப்பிடித்தமானது ஒரு நல்ல கனவு இது.
இதில் கிருஷ்ணன்
இனிமையான லட்டு போல இருக்கிறான் என நினைத்தேன். ஆனால் விதையிலேயே மரம் இருக்கும் என்பதுபோல
நானே மரணம் என்று கீதையிலே சொல்லும் அந்த பரந்தாமனும் இந்தச்சின்னப்பிள்ளைக்குள்ளும்
இருக்கிறான் என்று தெரிந்தது. ஆனால் நீலம் ஒரு மயங்கவைக்கிற மொழி நடைகொண்டிருக்கிறது
ஆகவே இதை வாசிப்பது ஒரு அருமையான இனிமையான அனுபவமாக உள்ளது
எம்