Tuesday, March 7, 2017

நினைவும் நனவும்





ஜெ

சில நுட்பமான இடங்கள் நாவலுக்குள் ஒழுக்கிலே வந்துபோய்விடும். அவற்றைத் தனியாகச் சுட்டிக்காட்டவேண்டும். பல இடங்களை அப்படி வேறு எவராவது சுட்டிக்காட்டித்தான் நானே வாசித்திருக்கிறேன். மாமலரில் அப்படிப்பட்ட இடம் ஆயுஸ் இறக்கும்போது உள்ளூர தன்னை புரூரவஸ் என நினைத்துக்கொண்டிருப்பது. தன்னை அவமதித்து அடித்து துரத்தியதற்கு நன்றி சொல்கிறான் புரூரவஸ். ஆயுஸின் வாய் வழியாக வந்து பத்மரின் மகன் சுதர்மரிடம் சொல்கிறான். அற்புதமான இடம். சிலிர்த்துவிட்டேன்

ஆயுஸின் மனசுக்குள் தந்தைக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்னும் வருத்தம் இருந்தது. அவனே எல்லாவற்றையும் கேட்டு வாங்கி துக்கப்படுகிறான். அதற்குக்காரணம் அதுதான். ஆனால் அவனுக்கு கடைசியில் தெரிந்துவிட்டது. அது நல்லதற்கே என்று. அதன்பிறகுதான் அவன் விடுபடுகிறான்

சாரங்கன்