Sunday, March 5, 2017

கொல்லாமை எனும் அறம் (மாமலர் - 16)
        

  இறந்துபோதல் என்பது எப்போதிருந்தாலும் நடக்கப்போகும் ஒன்றுஆனாலும் நாம் இறந்துபோவோம் என்ற எண்ணத்தை நம் நினைவிலிருந்து எப்போதும் விலக்கி வைத்திருக்கிறோம்.    அதை தடுக்கவே முடியாது எனத் தெரிந்திருந்தும்   ஒரு இறப்பை  ஏற்றுக்கொள்ள நம் மனம் மறுக்கிறது. பிற உயிர்களின் இறப்பு நம் இறப்பை எப்போதும் நினைவுபடுத்துகிறது.   ஏனென்றால் நாம் ஒவ்வொரு இறப்பிலும் நம் இறப்பை காண்கிறோம். உயிரற்ற விலங்குகளின்  உடல்களில் நம் உடல் பிரதிபலிக்கிறதுஅதனால்  அந்த சடலங்கள் நமக்கு அச்சமூட்டுகின்றன.    ஒரு  விலங்கு சாகடிக்கப்படுவதில்  நம் உள்ளத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.   ஆக நம் உள்ளம் ஒரு உயிர் கொல்லப்படுவதை அது நம்மால்  ஆனாலும் சரிபிற உயிரால் ஆனாலும் சரிஒத்துக்கொள்ள மறுக்கிறது.   அதன் காரணமாக பொதுவாக நாம்  ஒரு உயிர் கொல்லப்படுவதை பெருந்தவறு எனப் பார்க்கிறோம். கொல்லப்படும் ஒரு உயிர் பெரிய நஷ்டத்தை அடைவதாக கருதுகிறோம்ஒரு மனிதனின் இயல்பான குணம் எவ்வுயிரின் இறப்பையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு விலங்கை  கொல்வது தவறென அவன் உள்ளம்எண்ணுகிறது. அதை உணர்வதற்கு  ஒரு மனிதனுக்கு  எவ்வித கல்வியறிவோ , சமூக நெறியோ தேவைப்படுவதில்லைதன் உயிரைத் தற்காத்துக்கொள்வதற்கு  அல்லது தன் உயிரைப் பேணுவதற்கு  உணவு வேண்டியென அல்லாமல்  பிற உயிரைக் கொல்வதை அது ஏற்றுக்கொள்வதில்லை,     தன் வேலை நிமித்தமாகவோ அல்லது இன்றியமையாத ஏதாவது ஒரு காரணத்திற்காகக்க்கூட  உயிர்களை கொல்ல நேர்ந்தால் அதை மிகுந்த தயக்கத்துடன்தான் மனிதன் செய்கிறான். தன் மனதில் ஏதோ ஒரு வெறியை ஏற்றிக்கொள்ளாமல் மனிதன்  கொல்வதில் இன்பம் காண்பதில்லை. அந்த வெறி, வஞ்சம் போன்ற உளத்திரிபை மனம் கொண்டிருக்கையில் மட்டுமே  ஏற்படுகிறதுமனிதனின் இயல்பான நெறி கொல்லாமைதான் எனச் சொல்லலாம். அவன் உளவியல் கொல்லாமைக்கு சார்பானது என்றே நான் கருதுகிறேன்
 

அதன் காரணமாக ஒரு உயிர் கொல்லப்படுவதைக்  காண்கையில் எவ்வித மாசும் இல்லாத புரூவரஸின் தூய உள்ளம் பதைக்கிறது. ஏன் இயற்கையில் இப்படி நிகழ்கிறது என வினவுகிறது. அதே நேரத்தில் உள்ளத்து ஆழத்தில் இப்படி ஒரு உயிர் இன்னொரு உயிரைக் கொல்வதில் ஒரு ஒப்புதலும் இருக்கிறது? இந்த முரண் இளம் புரூவரஸின் உள்ளத்தை பெரிதும் வருத்துகிறது. அவன் துர்வாசரை வினவுகிறான்.
சொல்க, சொல்க முனிவரே, இது ஏன் இவ்வண்ணம் நிகழ்ந்தது? இங்கு ஓருயிருக்கு பிறிதுயிருடன் என்ன பகை? ஒன்று பிறிதை அழிப்பதில் எழும் அப்பேருவகையின் பொருள்தான் என்ன? மீனெனத் துடிதுடிக்கையில் என் உள்ளத்தின் ஒரு பாதி கொக்கென சுவையறிந்தது ஏன்?” என்றான்.

   

உடல் அன்னத்தால் கட்டப்படுவது. அதற்கான  அன்னத்தை ஒவ்வொரு உயிரும் தன்னைச்சுற்றியிருக்கும் புடவியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டியதாக இயற்கை அமைத்துள்ளது. அந்த அன்னம் எங்கிருந்து எப்படி பெறுவது என்பதை அந்தந்த உயிர்களின் இரத்தத்தின் அணுக்களில் எழுதப்பட்டுள்ளது. அதை மாற்றிக்கொள்வது  எவ்வுயிர்களுக்கும் இயலாத ஒன்று. பெரும்பாலான உயிர்கள் தன் அன்னத்தை மற்ற உயிர்களின் உடல்களிலிருந்து பெற்றுக்கொள்கின்றன.      இந்த விஷயத்தில் தாவரங்கள்தான் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. அதனால்  எவ்வுயிருக்கும் எவ்வித துன்பத்தையும் அளிக்காமல் தன் உணவை தேடிக்கொள்பவைதன் அன்னத்தை அவை மற்ற உயிர்களிலிருந்து பெற்றுக்கொள்ளாமல் அவை  தன் அன்னத்தை ஞாயிறின் ஒளியிலிருந்தே பெற்றுக்கொள்ளும் பெரு வல்லமை பெற்றவைஞாயிறின் பெருங்கருணையான ஒளியாற்றலை உணவென சமைத்துக்கொள்கின்றனஅப்படி அவற்றினால்  உருவாக்கப்பட்ட  உணவே வெவ்வேறு வடிவங்களில் அனைத்து உயிர்களுக்கும் அன்னமென சென்றமைகின்றனஇந்தச் செயலுக்கு அவை எந்த உயிரின் உதவியையும் அது கேட்பதில்லைஎவ்வுயிருக்கும் எவ்வித கெடுதலையும் உருவாக்குவதில்லை. அவையே முழுமையான கொல்லாமையைக் கடைபிடிக்கின்றன.
 

சில ஒட்டுண்ணிகளாக பிற உயிர்களின் உடலிலிருந்து அவற்றைக் கொல்லாமல், தன் அன்னத்தை எடுத்துக்கொள்கின்றன. ஆனால் அவை அந்த பிற உயிர்களை  கொல்வதில்லை. இருந்தாலும் இது முழுமையான கொல்லாமையாக கொள்ள முடியுமா எனத் தெரியவில்லைஒரு உயிரை அதற்கு தெரிந்தோ தெரியாமலோ வதை செய்தல், அல்லது ஏமாற்றுதல் முழுமையான கொல்லாமை இல்லை என்றே தோன்றுகிறது.    ஊனுண்ணி விலங்குகளுக்கான அன்னம் என்பது மற்ற விலங்குகளின் உடல் என இருக்கிறது. அதற்காக அவை மற்ற உயிர்களைக் கொன்று அவற்றின் உடலிலிருந்து தன் அன்னத்தைப் பெற்றுக்கொள்கின்றனஅவற்றுக்கு இப்படி உயிர்களைக் கொல்லுதலைத்தவிர   வேறு வாய்ப்பில்லாத காரணத்தால் அவை செய்வது அவ்வுயிர்களின் அறத்தின் படியும் புவியின் பொது அறத்தின்படியும் தவறென ஆவதில்லை
       

ஆனால் ஒரு புலிபுள்ளி மானை வேட்டையாடுவதை காண்கையில் நம் மனம் பதட்டமடைகிறது. சிலர் மானைக்  காப்பாற்ற புலியைக் கொல்லலாம்  எனும் அளவுக்கு நினைக்கின்றனர்சிலர் மானைக்கொல்லாவிட்டால் அப்புலிமற்றும் அதன் குட்டிகள் அவற்றுக்கான உணவு கிடைக்காமல் இறந்து போய்விடும் என்பதால அதில் ஒன்றும் தவறில்லை என்கிறார்கள். உண்மையில் இதில் நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஏற்றுக்கொள்வதே அறிவுஅவை வாழும் சூழலை கெடுக்காமல் இருந்தாலே போதுமானது. இதுவரை ஊனுண்ணி விலங்குகளால் அவை கொன்று தின்னும் எந்த  விலங்கினமும் அழிந்ததில்லை. ஊனுண்ணிகளுக்கு கொல்லாமை என்ற நெறி பொருளற்றது. ஒருவேளை கொல்லப்படும் விலங்கு கூட தான் மூப்படைந்து உணவு தேடமுடியாமல் பசியாலும் நோயாலும் துன்புற்று சிறிது சிறிதாக இறப்பதை விட ஒரு ஊனுண்ணியால் சட்டென்று கொல்லப்பட்டு இறந்துவிடுதல் மேலானதோ என்று தோன்றுகிறது. இப்படி
அன்னத்தை உண்டு உடல்  வளர்த்து தானும் பிற உயிர்க்கு அன்னமாகும் சுழற்சி  இயற்கையில் ஓயாமல் நடந்துகொண்டிருக்கிறது.


கொல்லுதலும் கொலையுறுதலும் இங்கு ஒழியுமொரு கணமில்லை. அவ்விரு செயல்களின் சரடுகளால் ஊடுபாவென நெய்யப்பட்டுள்ளது இப்புடவிஎன்றார் துர்வாசர்
இவையனைத்தும் ஒரு நிலையில் உள்ளமும் அறிவும் ஆழமும் கொண்ட உயிர்க்குலங்கள்.  பிறிதொரு முறையில் அன்னத்தை உண்டு அன்னமென்றாகும் வெறும் பருப்பொருட்கள்.
 
  
     

இதில் மனிதனுடைய நிலை என்னதனக்கான உள நிலையை தன் சிந்தனைசார்ந்து உருவாக்கிக்கொள்ளும் சுதந்திரம் மனிதனுக்கு மட்டுமே இருக்கிறதுஎல்லாஉயிர்களிடத்திலிருந்தும் தனக்கு எது கிடைக்கும் எனத் தேடும் சுயநல குணம்  இருப்பதைப்போல அதற்கு  நேர்  எதிராக எல்லா உயிர்களின் நலத்தை  நினைக்கும் ஒரு பேரறத்துக்குமான அடிப்படைக்குணமும்  மனிதனுக்கு இருக்கிறது.   மனிதன் கொல்லாமையை கைக்கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு இருக்கிறது  எனும்போது அதை கைக்கொள்வதே சரியெனத் தோன்றூகிறது. ஊனுணவில்  தன் அன்னத்தைப் பெற்றுக்கொள்வது அவனுக்கு  எளிதாக இருப்பதால் அவ்வுணவில் அவன் சுவையை வளர்த்துக்கொண்டான்ஊனுணவு மற்றபடி அவனுக்கு அவசியமான தேவையென இல்லாதிருக்கும்போது அதை அவன் தவிர்ப்பதே சரியானதுஆனால் தன்  நாச்சுவைக்கு அடிமையாகி வேறு  வேறு காரணங்களை  கூறிக்கொண்டு அவன் ஊன் உண்பதை தொடர்கிறான்ஒருவன் அறத்தில்  உயரும்போது ஊனுணவைத்  தவிர்ப்பது மிக இயல்பாக நடக்கும் ஒன்றாகவே கருதுகிறேன்தாவரங்களைக்கூட உணர்வுள்ள உயிர்களெனக்கொண்டு அவற்றுக்கு தேவையில்லாமல் சேதம் விளைவிப்பதை அறத்தோர் விரும்புவதில்லைவில்வ இலைகளை பறித்துவந்து அர்ச்சனை செய்தேன் என்ற ஒரு பக்தரிடம்  இரமணர் ஏன் இலைகளை கிள்ளி அர்ச்சனை செய்கிறாய். உன்னை கிள்ளிப்போட்டு அர்ச்சனை செய்துகொள்வதுதானே என்று  கடிந்துகொண்டிருப்பதை படித்திருக்கிறேன்.   அவர் ஆசிரமத்தில் மாங்காய்களைப் பறிப்பதற்காக  சிறு கிளைகளோடு உடைத்துப்பறித்தவர்களை கடிந்துகொண்டு வெளியேறச் சொன்னதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். கொல்லாமை என்பது மற்ற உயிர்களிடம் கண்டு அறிவதற்கான ஒன்றல்லஅது மனிதர்களாகிய நாம் மேற்கொள்ளவேண்டிய அறங்களில் ஒன்றுநாம் வளர்த்துக்கொண்டிருக்கும்  விழைவுகளின் காரணமாக ஊனுணவைக் கொள்ளாமல், கொல்லாமையை நோக்கி  மேலும் மேலும் நாம் நம்மை உயர்த்திக்கொள்ளவேண்டும் என  வெண்முரசில்  துர்வாசரின் சொல் நமக்குக் காட்டுகிறது.


சொல்க, நான் என்ன செய்யவேண்டும்?” என்றான். “நானறிந்ததெல்லாம் நாம் நம்மை ஆள்வதைப்பற்றி மட்டுமே. நம் கைகளால் கொலை செய்யாதிருப்பது. நம் உள்ளத்தால் அறம் மீறாதிருப்பது. இளையோனே, நமது விழைவுகள் முறை மீறாதிருக்கட்டும். நமது கனவுகளும் கரைகண்டு அமைவதாகுக! மானுடர் இப்புவியில் ஆற்றுவதற்கு பிறிதொன்றுமில்லை


தண்டபாணி துரைவேல்