Tuesday, March 7, 2017

கீழ்மையின் விடுதலை






ஜெ

கீழ்மையில் ஈடுபட்டு துக்கத்தைக் கடக்கலாமென்று நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தபோது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. என் நண்பரின் அப்பா தற்கொலைசெய்துகொண்டார். வியாபாரப்பிரச்சினை. இவர் மனசொடிந்துபோனார். அப்போது ஒரு மூத்தநண்பர் அவரை தாய்லாந்துபோய் ஃப்ரீக்கவுட் செய்யும்படி சொன்னார். இவர் அங்கே சென்று ஒரு மாசம் ஜாலியாக இருந்து திரும்பிவந்தார். நாலுலட்சம் செலவு. ஆனால் மீண்டுவிட்டார். அதைத்தான் ஹூண்டன் சொல்கிறான் என நினைக்கிறேன்

மனம் ஒரு துக்கத்திலிருந்து வெளியேறவேண்டுமென்றால் வேறு எதிலாவது ஈடுபடவேண்டும். அது நல்லதைவிட கீழானதில் ஈடுபடுவதையே எளிமையானதாக நினைக்கிறது

செல்வராஜ்