Monday, March 6, 2017

ஊர்வசியின் புதிர் 2





ஜெ

வெண்முரசு நாவல்களில் வாசகனின் கற்பனைக்கான தாவல்கள் இருந்தன. ஆனால் நேரடியான சவால்களாக புதிர்கள் ஏதுமில்லை.  இப்போது மாமலரில் வரும்புதிர்களை யோசிக்கிறேன். அதிலுள்ள முக்கியமான புதிர்களுக்கு என்னுடைய பதில்கள். இந்தப்பதில்கள் அந்நாவலிலேயே வரும் கதைக்குள் இருந்து எடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்

தாரை ஏன் நிமிர்ந்து செல்கிறாள்? அவள் விரும்பியபடி பிள்ளையைப் பெற்றிருக்கிறாள். ஒரு அம்மாவில் நிமிர்வு அது. அதோடு அத்ரிமுனிவருக்கு அனசூயையில் பிறந்தவன் சந்திரன். அவள் சந்திரகுலத்து அரசமரபின் முதல்பிள்ளையை பெற்றிருக்கிறாள்

ஏன் ஊர்வசி புரூரவஸ் நிர்வாணமாக வரக்கூடாது என்று சொன்னாள்? ஏனென்றால் அவனை அவள் மானுடனாகப் பார்க்க விரும்பவில்லை. அவனை அவள் கற்பனையில் தேவனாக நினைத்து உறவுகொண்டாள். நிர்வாணமாகப் பார்த்தபோது மனிதன் என உணர்ந்து வெட்கினாள் ஆகவே திரும்பிச்சென்றாள்

தெரியவில்லை. இப்படிச் சொல்லலாம் என நினைக்கிறேன்

மனோகரன்