Tuesday, March 14, 2017

அம்பை

 
 
மதிப்பிற்குரிய திரு. ஜெயமோகன் அவைகளுக்கு ,


நான் கடந்த மூன்றாண்டுகளாக உங்கள் தளத்தின் வாசகன். கணிப்பொறி துறையில் பணி புரிகிறேன். பெரிய இலக்கிய வாசிப்பு இதுவரை எனக்கு இருந்ததில்லை. ஆனால் இலக்கியத்தின் மேல் எங்கோ ஒரு ஆர்வம்  ஒட்டிக்கொண்டு இருப்பதாக  எப்போதும்  உணரித்திருக்கிறேன். சரியான இடத்தை தங்கள் அறிமுகத்துக்கு முன் அரித்திரத்திருக்கவில்லை .

உங்கள் கட்டுரைகளை  அனுதினம் வசித்து வந்தியிருந்தாலும் தங்கள் இலக்கிய ஆக்கங்களை ஒரு வித  அச்சத்துடன் தவிர்த்து வந்தேன்.அச்சம்  ஏன் என அறியேன்.

இலக்கியத்தை கண்டுதான் அச்சமே அன்றி கட்டுரைகள் வாசித்தல் எப்போதும் உண்டு. தங்கள் கட்டுரைகளை  வாசிக்க நேர்ந்த நாளிலிருந்து தங்கள் மேல் பெருவியப்பு அடைந்தவனகவே இருக்கிறேன்.இத்தனை சமநிலை, இத்தனை நுண்மையான பார்வை, இதனை சிந்தனை தெளிவு வேறெவரிடமும் கண்டதில்லை.

ஒருவாரம் முன்னால், ஆனது ஆகட்டும் என துணித்து தங்கள் வெண்முரசைத் துவங்கினேன் . இதுவரை மழைப்பாடல் 38 அத்தியாயம் வரை வாசதித்திருக்கிறேன். இப்போதே எத்தனையோ சிந்தனைகள், ஐயங்கள். சரி தங்களிடமே கேட்டு பார்க்கலாம் என்று இக்கடிதம்.


தங்ககள் அயராத பணிகளுக்கு நடுவே நேரமிருந்தால் மேலே வாசிக்கவும். பதிலளித்தால் மகிழ்வேன். தங்கள் நேரத்தை வீணடிக்கும் எண்ணம் இல்லை.

நீங்கள் மாமலரில் மூழ்கி இருக்கிறீர்கள். தங்களை மழைப் பாடலுக்கு இழுக்கலாமா என்று தெரியவில்லை.

அம்பையை பற்றி எண்ணுமதோறும் இவ்வய்யம்.

பேரிலக்கிங்களில் தோன்றும் தெய்வீக  உருவகங்களை ஒரு விதமான குறியீடாக எண்ணலாம் என்று தங்களின் இலியாட் பற்றிய கட்டுரையில் படித்த  நினைவு. இதையே பாரதத்தில் பொருத்திப்பார்க்கிறேன்.

கேள்விக்கு வருகிறேன்.

அம்பை அறிமுகம் முதலே ரஜோ குணத்தின் தன்மையளாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் கதையின் ஓட்டத்தில் செல்லும்போது ஓரிடத்தில் வராகிஹியின் குறியீடாக மாற்றமடைகிறாள். ஏன் வாசிப்பு சரி என்றால், பீஷ்மரிடம் மன்றாடி, பின் சினம்  கொண்டு வனம் புகும் வேளையில் வராஹி எதிர்ப்படுகிறாள். அதற்கு மேல் செல்லும்தோறும் பன்றியொடு ஒப்பீடு கொண்டு சிகண்டியாய் மாறுமிடத்தில் பன்றியால் முழுமை கொள்கிறாள்.பன்றி தமோ குணத்தின் குறியீடாகவே அறிவேன். பன்றியின் வீரம் பல இடங்களில் சித்தரித்க்க படுகிறது என்றாலும் தமோ குணமே மிஞ்சி இருப்பதாய் தோன்றுகிறது. சரியா  என தெரியவில்லை.

ரஜோ குணவதியான அம்பை ஏன் தமோகுண உருவமாக மாற்றம்  கொள்கிறாள். அவள்  சினம் கொண்டால் மேலும் தீயாக, சிம்மமாக அல்லவா ஆகியிருக்க வேண்டும். ஏன் பன்றி?

கரணம் அன்றி இக்குறியீடு இருக்காது என்று  எண்ணுகிறேன் - ஏன் என பிடி கிடைட்டவில்லை.


இப்படி சிந்தித்து  பார்க்கிறேன். பன்றி ஒருவகையில் தாய்மையின்  உருவாக தெரிகிறது. அனைத்தையும் உண்டு தன் குட்டிகளுக்கு உணவாகும் தாய். மழைப்பாடல் முழுக்கவே தாய்மை நிறைந்திருக்கிறது அது சத்யவதியில், கங்காதேவியில்  ஆகட்டும் - அல்லது உத்தரையில், சந்தனுவின் தாயில் ஆகட்டும் - அல்லது அம்பிகை, அம்பாலிகை, அவர்களின் தாயில் ஆகட்டும். எப்போதும் தாய்களையே சுற்றி வருகிகிறது. கணவனை யமனிடம் இருந்து மீட்ட சாவித்திரியும் கூட தன குழந்தைகளை தீயிலிட்ட தாயாகவே வருகிறாள்.ஆஸ்திகனுக்கு கதை சொல்லும் மனசாதேவியில் தொடங்கும் கதை, அம்பையையும் சிகண்டி முன் தாயாக்கியே செல்கிறது.

தாய் அன்பின் உரு என்று பொதுவாக எண்ணம்  இருந்தாலும், மழைப்பாடல் தய்மை  சேய்மீதான  ஒருவித ஆதிக்கத்தை, தாயமையுள்  உறையும் ஒரு  வித சுயநலத்தை காட்டி நிற்கிறதோ என்று தோன்றுகிறது. தாய் தன மைந்தர் மீது ஒரு வித அதிகாரம் கொண்டவளாகவே தெரிகிறாள். அந்த அதிகாரத்தால் தன வாழ்வை முழுமை செய்ய விழைகிறாள்.எல்லா தாயன்புமே ஒரு அதிதிகரத்தின் மறுபக்கம்தானோ?

நிலமும் ஒரு தாயே. அது தன்னை ஆளும் மன்னனை தன அதிகாரத்தால் பிணைக்கிறது. காசி மன்னனோ, சால்வனோ அந்த நிலமென்னும் தாயாலேயே அலைக்கழிக்க படுகின்றனர். நிலமும் தன பொறுமையால் ஒரு தமோ குண ரூபிணியே.

வ்யாஸரிடம் சத்யவதியும், ஆஸ்திகனிடம் மானஸாதேவியும், சிகண்டியிடம் அம்பையும் காட்டுவது அந்த அதிகாரத்தையே அன்றோ?


நிலமோ, பன்றியோ, பாதாள நாகங்களோ  - தங்கள் தாய்மை தன்மையிலேயே தமோகுணம் கொண்டவையோ ? தாய்மயே தமோகுணமோ?

அம்பை பீஷ்மரை திரும்பி நோக்கிய நேரம் தன தாயமயை உணணர்ந்தாள். அங்கே அவள் தமோகுணம் ரஜோகுண இயல்பின் மேல் ஏறிவிட்டதோ? அக்கணமே அவள் வாராஹியாக தொடங்கினாளோ?

நான் எண்ணுவது சரியா என தெரியவில்லை. ஆர்வமிகுதியால் அர்த்தமின்றி குழப்பிக்கொள்கிறேனோ?

தங்கள் எண்ணம் அறிய ஆவல்.

நேரத்தை வீணடித்திருந்தால் மன்னிக்கவும்.


பணிவுடன்.

கணேஷ் 

அன்புள்ள கணேஷ்,

குழப்பிக்கொள்ளவில்லை – நீங்கள் வாசிப்பதே சரியான முறை. எளிதாக குறியீடுகளைக் கடந்துசெல்லும் கதைவாசிப்பு பிழையானது. அதேபோலவே இன்னகுறியீடு இதற்கு என அர்த்தங்களை இயந்திரகதியில் அடைந்துசெல்வதும் போதாத வாசிப்புதான்.

இலக்கியத்தின் இயங்குமுறையே பொருள்மயக்கம் [ambiguity] வழியாகச் செயல்படுவதுதான். குழம்புவதும் வெவ்வேறு வகையில் பொருள்கொள்ளுவதும் நம் ஆழ்மனம் அந்தக்குறியீட்டை எதிர்கொள்வதையே காட்டுகிறது. கனவுகளை அப்படித்தானே எதிர்கொள்கிறோம்?

நீங்கள் கேட்டுக்கொண்ட வினாக்கள் அனைத்தும் முக்கியமானவை. ஆனால் அதற்கு ஆசிரியனாகிய நான் திட்டவட்டமான பதில்களைச் சொல்லமுடியாது, சொல்லக்கூடாது. நானும் ஒரு கனவாகவே அதையெல்லாம் அடைந்திருப்பேன்

இரு விஷயங்களைச் சுட்டுகிறேன். ஒன்று, அம்பையிடமிருந்த வஞ்சம். அந்த தீ ரஜோகுணம் சார்ந்தது அல்ல.

இரண்டு, நம் மரபில் பன்றி இன்று நாம் காண்பதுபோல அழுக்கு, இருட்டு ஆகியவற்றின் அடையாளம் அல்ல. மண், தாய்மை, வளம் ஆகியவற்றின் அடையாளம்

ஜெ