ஜெமோ
அசோகசுந்தரி தேய்ந்து மறையும் காட்சி உள்ளம் உருகவைத்தது. அவளுடைய அழியா இளமையும்
சரி அவள் அழிவதும் சரி ஒரு குரூரமான ரியாலிட்டி. பெண்களின் வாழ்க்கையே அதுதான். அதிலும்
செவிலி நகுஷனிடம் சொல்கிறாள். நீ உன் ஆசையால் பெரிய அரசனாக ஆவாய். உன் ஆசையே உன் நாட்டுக்கு
வளம் சேர்க்கும். ஆனால் அதற்கு அடியில் பெண்ணின் கண்ணீர் இருக்கும். எல்லா ஆணுக்குள்ளும்
ஓர் அரசன் இருக்கிறான்
மிகக்கூர்மையான இடம் செவிலி நகுஷனிடம் பேசுவது. அவ்வளவையும் சொல்லி அம்மாவாக
நின்று அவள் அவனை மன்னிக்கிறாள். அன்னையரின் சாபம் பெற்றால் உலகில் ஒருவராவது தேறுவார்களா
என்று கேட்கிறாள்
ராமச்சந்திரன்