Wednesday, March 15, 2017

போரின் சித்திரம்






அன்புள்ள ஜெ

மாமலரில் வந்த பெரிய போரின் சித்திரம் அதிரவைத்தது. ஒரு ஹாலிவுட் படம்போல இருந்தது . இதுவரை எத்தனை போர்க்காட்சிகள் வந்துள்ளன என நினைத்துக்கொண்டேன். ஆனால் இந்தப்போர்க்காட்சி மாறுபட்டது. ஏனென்றால் இதில் போரில் நாயகர்கள் இல்லை. சம்பந்தப்படாத சிலர் பார்ப்பதுபோல இருந்தது. அதேசமயம் அவர்கள் அனுபவத்தால் போரின் அத்தனை நுட்பங்களையும் உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே போரின் அத்தனைச் சிக்கல்களையும் அவர்களே சொல்கிறார்கள். நாகர்களுக்கு வியூகம் வகுக்க தெரியவில்லை. ஆனால் ஷத்ரியர் வியூகம் வகுக்கிறார்கள். வியூகமே வகுக்காதவர்கள்போல பாவலா காட்டி போய் அடித்து நொறுக்குகிறார்கள்.  அந்த இடைவெளி அற்புதமாகச் சொல்லப்பட்டிருந்தது

ஜெயராமன்