Wednesday, March 15, 2017

கோடரியால் மலர் கொய்வது. (மாமலர் - 38)
        
காமம் என்பதில் இன்பம் இருவருக்கிடையில் கொடுப்பதும் பெறுவதுமாக பரிமாறிக்கொள்ளப்படுகிறதுஇருவருக்கும் அதில் சமபங்கிருக்கிறது. என்ற போதிலும் ஆண் கெஞ்சியும் இரந்தும் பெருபவனைப்போலவும் பெண் தயக்கத்துடன் மனமிரங்கி தானமெனத் தருபவளைப்போலவும் ஒரு நாடகம் நடிக்கப்படுகிறதுஆண் ஆவல் கொண்டு நெருங்குபவனாகவும் பெண் அவனை நகையாடி விலகுபவளாகவும் நடந்துகொள்கிறார்கள். பெண் தன்னை அகங்காரம் என்ற கனத்த அங்கியைப் போர்த்திக்கொள்கிறாள். அந்த அங்கி பலவித நாடாக்களால  முடிச்சிடப்பட்டிருக்கிறது. ஆண் அவளை அணுகி ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து அந்த அங்கியை களைய வேண்டியாதாக  உள்ளது. அந்த முடிச்சுகள்  சில அங்கிகளில்  இறுக போட்டிருக்கக்கூடும்.   அதை நளினமாக கவனமாக அந்த அங்கிக்கு சேதம்   விளைவிக்காமல் முடிச்சுகளை அவிழ்ப்பது ஆணின் திறமையில் உள்ளது. அதை  மெல்லிய சீண்டல்களாக, அவள் விரும்பும் பொருட்களை பரிசளிப்பதாகசிரிப்பூட்டும் செயல்கள் மட்டும் பேச்சுகளாக , புகழ் மொழிகளாக , சிறு பிள்ளை என ஆகி  கொஞ்சுவதாக, கெஞ்சுவதாக, அவளை சிறு குழவியைப்போல் சீராட்டுவதாக  ஆண் செய்தல்  வேண்டும்ஒரு பெண் காமத்தில்  விருப்பிள்ளாதவளாகதொல்லை தரும் செயலென, கருதி சினம் கொள்பவளாக, பின்னர்  அவன்மேல் இரக்கம்கொண்டு இறங்கி வருபவளாகஏங்கி அழும் குழதையை எடுத்தணைக்கும் தாயென பாசம் கொண்டவளாகமனங்கனிந்து ஏற்றுக்கொள்ளும் காதலியாக  காமத்துக்கு முந்தைய தன்  ஆடல்களில் பல பாவனைகளை நிகழ்த்துகிறாள். இந்த நாடகம் எப்போதும் ஒரு காதல் தம்பதியிடம் நடைபெற்று வருகிறது. இது மனிதர்களிடத்தில் மட்டுமில்லை. அனைத்து விலங்கினத்திலும் பெரும்பாலும்  அப்படித்தான் நடக்கிறதுகாமம் அவர்கள்  உள்ளத்தில் இருந்து உடல் முழுதும் பரவி வரும் கட்டத்திற்கு  இருவரும் சென்று சேர்வதற்கு முன்பான ஆடல்களே இவை. அக் கட்டத்திற்கு பிறகு அந்த நிகழ்வை இரு உடல்களும் நிகழ்த்திக்கொள்ளும்இப்படி ஒருவன் காம இன்பத்தை ஒரு மெல்லிய மலரை கொய்து எடுப்பதைப்போல பெறுவது அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் அதிக இன்பத்தை விளைவிக்கிறது.
      

  ஆனால் தன் அவசர புத்தியால்அகங்காரத் திமிரால்ஒரு பெண்ணை  அவள் விருப்பின்றி ஆண் வன்முறையுடன் காமத்தில் ஈடுபடுவது சிலசமயம் நடைபெறுகிறது. இது ஒருவன் தன் மனதை   அதீத காமத்திற்கு  ஆட்படுத்திக்கொடுக்கும்போது, கள்ளத்தனமாய் காமத்தில் ஈடுபடும்போது, வஞ்சம் காரணமாக அவமதிப்பதற்கென, இழிவுபடுத்துவதற்கென என கீழ்மையான காரணங்கள் பொருட்டு நடைபெறுகிறதுஒரு பெண்ணை இப்படிப்பட்ட வன்காமத்தில்  ஈடுபடுத்துவதில் அவள்  உடலளவில் பாதிக்கப்படுவதைவிடஉள்ளத்தளவில் பெரிதாக பாதிக்கப்படுகிறாள். தான் பெரிய அளவில் சிறுமைப்படுத்தப்பட்டதாக நினக்கிறாள். அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு வருவதற்கு அவளுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறதுயாரோ செய்த சிறுமைக்கு அவள் ஏன் உளம் பாதிப்படைகிறாள் எனத் தோன்றும். ஆனால்  பெண்ணின் உளவியல்  அப்படித்தான் இருக்கிறதுஅதன் காரணமாக சமூகம் இதைக் கடுங்குற்றமாய் கருதி தண்டனையளிக்க வேண்டிய ஒன்றென வைத்திருக்கிறது. 
      

அசோகசுந்தரி நகுஷனால் மணந்துகொள்ளப்பட்டவள், அவளுடன் உறவுகொள்ள அவனுக்கு சமூகத்தின் அனுமதி இருக்கிறது.   ஆனால் அவள் இன்னும் மனதளவில் கன்னியென ஆகாமல் இருக்கிறாள்.     நகுஷன்  அவன் அவசரப்புத்தியால், அறியாமையால்இதுவரை தங்கை அன்னை போன்ற மெல்லிய உணர்வுள்ள  பெண்களுடன் அவன் வாழ்ந்தறியாத காரணத்தால், இப்படி நடந்துகொள்வதுதான் சரியோ என்று கொண்ட மடத்தனத்தால்,   அவளுடன் வன்காமம்   கொள்கிறான். மலரைக்கொய்யச் சென்றவன், மலர்ச்செடியையே மிதித்து துவைத்துவிடும் பெருந்தவறைச்  செய்துவிடுகிறான்அவன்  ஒரு முழுமையான ஆணென அவன் மனதிற்குள் இன்னும்  கனியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

 தண்டபாணி துரைவேல்