நானும்
நகுஷனிடம் 'நீ குரு நகரத்து இளவரசன்' என்று உரைப்பது யார் என்று புரியாமல்
இருந்தேன். உங்கள் கடிதம் அதற்குரிய பதிலைத் தந்தது. ஆம், அவன் அந்த
ஒற்றனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
மாமலரின்
ஒவ்வொரு கதையும் நல் முத்து சரத்தில் கோத்த மணிகளாக உள்ளன. பீமன் தன் முது
தாதைகளின் கதைகளை அவர்களாகவே உணர்ந்து அறிவது ஜெமோ வடிவமைக்கும் புனைவின்
உச்சம். அவரெழுத்தின் சொற் கோர்வைகளும் வர்ணனைகளும் திரும்ப, திரும்ப
படிக்க தூண்டுகின்றன.
உங்களைப் போன்றவர்களின் கடிதங்கள் என் புரிதலை மேலும் எளிதாக்குகின்றன.
திரும்பவும் நன்றி,
ராதிகா