ஜெ
திரில்லான வாசிப்புக்கு ஒன்று செய்வார்கள். என்ன நடக்கும் என்று முன்னாடியே சொல்லிவிடுவார்கள். அது எப்படி நடக்கும் என்பதை மட்டும் பரபரப்பாகச் சொல்வார்கல். அதே போல அமைந்திருக்கிறது மாமலரின் அத்தியாயங்கள். மகனை இழந்து அந்த வலியில்தான் இவன் சாகப்போகிறான் என்று தெரியும். அது எப்படி நடக்கும் என்பதைத்தான் பரபரக்க வாசிக்கவேண்டியிருக்கிறது
ஆயுஸின் பரவசத்தை வாசித்தபோதெல்லாம் பரிதாபமாக இருந்தது. அவனுடைய உச்சகட்ட மகிழ்ச்சி அப்படியே துக்கமாக ஆகிவிட்டது. அந்த மாற்றம் அருமையாகச் சொல்லப்பட்டிருந்தது
செல்வகுமார்