Tuesday, March 21, 2017

இருபாலினத்தவர்






வெண்முரசில் இருபாலினத்தவர் பெரும்பாலும் சமையர்களாக வருகின்றனர்.
அவர்களைக் குறிப்பிடும்போதே காமத்தின் சாயல் வந்து விடுகிறது.

மாமலரில், புருவரசின் காமமண்டபத்திற்கு வெளியே காவலர்களாக நிற்கின்றனர்.
வெண்முகில்நகரத்தில், அர்ஜுனன் மாயைச் சந்திக்க ஓர் தூதனை அனுப்பச்சொல்கிறான். "செல்வது இருபாலினராக இருக்கட்டும்" என்று கூறுகிறான்.
இதன் முக்கியத்துவம் என்ன?


அன்புடன்,
மகேஷ்.

வெண்முரசில் மட்டும் அல்ல, சமீபகாலம் வரைக்கும்கூட இருபாலினத்தவர் இங்கே இழிந்தவர்களாகக் கருதபப்டவோ கேலிபேசப்படவோ இல்லை. அது தெய்வங்களின் ஒரு லீலை ஒரு தனிவகை அருள் என்றே கருதப்பட்டது. அவர்கள் சில துறைகளில் பிறரை விட திறன் கொள்ளமுடியும் என கருதப்பட்டது. அணிசெய்தல் சமையல் போன்ற துறைகள்.

காவலுக்கு அவர்களை அந்தப்புரத்தில் நிறுத்தும்வழக்கமும் இருந்தது. வலுவான உடல்கொண்ட பெண்கள் என்னும் தகுதிகாரணமாக

ஜெ