ஜெ
நகுஷன் வானிலெழுந்து
மேகத்தை மிதித்து சொர்க்கத்துச்சென்றான் என ஓர் இடத்தில் வருகிறது. ஆனால் அவன் கனவில்தான்
இந்திரனாக ஆனான் என்று இன்னொரு இடம். அதேபோல புரூரவஸ் வானில் பறந்தான் என ஓர் இடம்.
அவன் சாதாரணமனிதன் என இன்னொரு இடம். கனவும் நனவும் மயங்கிக்கிடக்கிறது.ஆரம்பநாவல்களில்
இந்த வேறுபாட்டை நீங்கள் தெளிவுபடுத்தினீர்கள். இப்போது வாசகனுக்கே விட்டுவிட்டீர்கள்.
திரும்பிச்சென்று பார்த்தால் நகுஷன் அங்கே இருப்பான் என சொல்லும்போது அந்த நகுஷன் என்
கனவாக இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது என்று நகுஷேந்திரன் கேட்கிறான். பித்துப்பிடிக்கவைக்கும்
குழப்பம் இது. இந்த ஆம்பிக்யுடி தான் இந்த கவர்ச்சியாக உள்ளது
பார்த்தா