இன்றைய
மாமலரில் மீண்டும் பிரஹஸ்பதி சந்திரன் தாரை
ஆகியவர்களின் கதை
ஆனால்
வேறு
வடிவில்..
விழைவை அகற்ற முயல்வதைப்போல அதை வளர்க்கும் வழி பிறிதொன்றில்லை.
இது
மிக
அழகான
வாக்கியம். ஜெ
சார்
இப்படி
அடிக்கடி ஆங்காங்கே சொல்வதையெல்லாம் தனியே
தொகுத்து வைத்திருக்கிறேன்.
மலராடிச் செல்லும் வண்டு மகரந்தங்களை கொண்டு செல்கிறது. முந்தையமலரால் அடுத்த மலரை கருவுறச்செய்கிறது
தாவரவியலின் அயல்மகரந்த சேர்க்கையை இப்படி
அழகாக
சொல்லிச்செல்கிறார் . அதுவும் மலராடிச்செல்லும் வண்டு! ஆடிச்செல்லும் எனும்
வார்த்தையில் எத்தனை
அழகு
ஒட்டியிருக்கிறது, பூவில்
மகரந்தம் போல?
லோகமாதேவி