Sunday, March 26, 2017

புலிகள்..



எங்கள் வீட்டில் ரொம்ப குட்டி குழந்தைகளை 'ஆம்பள சிங்கம் ..'  என்றும் 'பொம்பள புலி..' என்றும் கொஞ்சுவதுண்டு..

அறிவு போல இருக்கும் எதையுமே பொருத்தி பொரட்டி பார்க்க வேண்டும் என்பதால்...


"அதிலிருந்தது காதல் என்பதை ஐயமிலாது உணர்ந்தார். சீற்றமென்றும் ஆர்வமின்மை என்றும் அகல்தல் என்றும் அது தன்னை நடிக்கிறது. ஆர்வமின்மை தன் காதலை பிறரிடமிருந்து மறைக்க, சீற்றம் அதை தன் உள்ளத்திடமிருந்தே விலக்க.  அகல்தல் தன் உடலில் இருந்து மறைக்க. காதல் அதை மறைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது. அதைக் கடக்கும் முயற்சிகள் வழியாகவே வலுப்பெறுகிறது. மறுப்பதற்குரிய சொற்கள் வழியாகவே மொழியாகிறது."

அதை எடுத்து 


மல்லாந்தும் ஒருக்களித்தும் ..
* ஒன்று முன்கால் தூக்கி வைத்து எழுந்து அமர்ந்து செந்நிற வாய்க்குள்  வெண்பற்கள் தெரிய, நாக்கு உள்வளைந்து அசைய,  கோட்டுவாயிட்டு உடல் நெடுக்கி சோம்பல் முறித்தது....
 முன்னால் சென்ற வேங்கை உறுமலில் கார்வை ஏற கால்களை நீட்டி உடலை நிலத்துடன் பதிய வைத்து பாய்வதற்கான நிலை கொண்டது. 

*படுத்திருந்த வேங்கைகளில் ஒன்று வாலைச் சொடுக்கி  நீட்டியபடி எழுந்து மெல்லடி வைத்து அதன் பின்னால் வந்து நின்றது. 

*மூன்றாம் வேங்கை ஆர்வமற்றதுபோல மல்லாந்து நான்குகால்களையும் காற்றில் உதைத்து முதுகைநீட்டி வாலைச் சுழற்றியபின் மறுபக்கமாக புரண்டது.

பாய்ந்தது என்னவோ மூன்றாவது தான் முதலில்..


இதெல்லாம் அறிவு இல்ல.. இருந்தாலும்.. 'மன் மதன் அம்பு' என்று ஞாபகம்.. 
'திமிர் பிடிச்சவ சார் அவ' 
'அது தான் சார் வேலி, இல்லன்னா ஏறி மேஞ்சுட்டு போய்டுவாங்க'

சரி இருக்கட்டும்.. கசன் குரு பாதத்தில் வைப்பதும் இதே மூன்று தானோ.. ஆணால் அவை அல்லி மலர்களாக?!?

நன்றி
வெ. ராகவ்