ஜெ
வெண்முரசில் இன்று வந்திருக்கும் நாகர்களின் குணாதிசயம் ஆச்சரியமானது.
அவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்கள். ஆனால் ஒரு பெரிய படையாக
திரளமுடியவில்லை. தமிழகத்தின் பழைய மறவர்படைகளைப்பற்றி வெள்ளைக்காரர்கள் இப்படி
எழுதியிருக்கிறார்கள். ஒரு திரளாக ஆனதனால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மவர்களை
எளிதில் வென்றார்கள். அதற்குமுன் நாயக்கர்களும் முஸ்லீம்களும் வென்றார்கள்.
அந்தக்குணாதிசயம் ஒரு பழங்குடிப்பண்பாடு என்பது ஆச்சரியமனது
அதே சமயம் அச்சம் அவர்களிடம் ஒரேசமயம் ஒரு திரளாகத்தான் பரவுகிறது.
அப்படியே கலைந்து ஓடிவிடுகிறார்கள்.
சிவா பாண்டியன்