ஜெ
மனிதர்க்ள் மாறாமலிருக்க முகங்கள் மாறிக்கொண்டே
இருக்கிறர்கள். அதைத்தான்பீமன் அந்த ஜலத்தில் பார்க்கிறான். ஆனால் சுக்ராச்சாரியார்
அதைத்தான் மெய்மையான வழியாக பார்க்கிறார். அதாவது மாற்றத்தின் நடுவே மாறாமலிருப்பது
பிரம்மம் என்றால் அது இதுதான் என நினைக்கிறார். இந்த தொடர்ச்சியைத் தற்செயலாகப் பார்த்தபோது
ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது. இப்போது எனக்கு இருக்கும் இந்த முகம் எவ்வளவு தொன்மையானதாக இருந்திருக்கும். ஒருலட்சம்
ஆண்டுகள் கூட இதுக்கு வயசு இருக்கும் இல்லையா?
சங்கரநாராயணன்