ஜெ
ஊர்வசி ஏன் திரும்பிவந்தாள் ஏன்று யோசித்தால்தான் அவள் ஏன் சென்றாள் என்பதற்கான
பதில் கிடைக்கும் என நினைக்கிறேன். அவள் கொண்டுவந்த ஆடுகள் இரண்டுவகை நினைவுகள். ஸ்மிருதி
சுருதி. நினைத்தது கேட்டது. அவள் அதையெல்லாம் மறந்து வெறும் பெண்ணாக அங்கே இருந்துகொண்டிருக்கிறாள்.
பெண்ணாக இருக்கையில் அவளுக்கு தேவகன்னிகை என்பதே ஞாபகமில்லை
அவன் நிர்வாணமாக
தெரிந்ததும்தான் அவனுடையது மானுட உடல் என தெரிகிறது. தேவர்களுக்கும் மனிதர்களுக்குமுள்ள
வேறுபாடே அந்த உடல்தானே? அவள் அதை வேறுவகையிலே கற்பனைசெய்து வாழ்ந்திருந்தாள். ஆகவே
உடனே தேவகன்னி என்பது நினைவுக்கு வருகிறது.அவள் அந்த ஆடுகளின் மேல் ஏறித்தான் வானம்
செல்கிறாள் அதுவே குறியீடுதான்
அதன்பின்னர் அவள்
திரும்பி வருகிறாள். ஏனென்றால் செல்லும்போதே மனிதவாழ்க்கையின் ஒரு நினைவை அவள்கொண்டுசெல்கிறாள்.
அதை அவளால் விடவே முடியவில்லை. ஏன் திரும்பி வந்தாய் என்ற கேள்வி அவளை நிலைகுலையச்செய்கிறது
ஜெயராமன்